ரஜனிகாந்தன். யாழ்ப்பாணம்: ரஜனிகாந்தன், மீசாலை வடக்கு, மீசாலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2010. (கொழும்பு: டாலி அச்சகம்).
62 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 18×13 சமீ.
யாழ்ப்பாணம் தென்மராட்சி மீசாலையில் பிறந்து கொழும்பில் வாழும் கவிஞர் ரஜனிகாந்தன், 1980 மார்ச் 23இல் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை மீசாலை விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திலும் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் பெற்றவர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக பட்டதாரியான இவர், சுடர் ஒளி பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும், வெற்றி எப்.எம். வானொலியில் செய்தி ஆசிரியராகவும் பணியாற்றியவர். இளையபாரதி, பாரதி, அபிமன்யு, நாரஹேன்பிட்டிய ரஜனி, ஆகிய புனைபெயர்களில் அவ்வப்போது எழுதிய கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. பயணங்கள் தொடரும், சீர்வரிசை, சுனாமி, அகதி முகாமில், உயிருதிர் காலம், அம்மா நினைவிருக்கோ, யாழ்ப்பாணம், பாட்டோடு பட்டம் வர, காதலி, பா கொண்டு வெல்வேன், லண்டன் காசு, மானம் இல்லை போடா, நாளை உன் கையில், அன்புள்ள எதிரிக்கு, உன்னால் வாழ்கின்றேன், யுத்தங்கள் ஓய்வதில்லை, விழித்திடு மனிதா, மனிதம் எங்கே இருக்கிறது?, ஓடிப் போய்விடு-அவனை விட்டு, தலைப்புத் தடம்புரண்ட மடல், உறவே நீ எனக்கு என்ன உறவு ஆகிய 21 தலைப்புகளில் இக்கவிஞன் எழுதிய கவிதைகள் இத்தொகுப்பில் சங்கமமாகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48638).