10862 புவியியல் வழிகாட்டி: க.பொ.த.சாதாரண தரம்.

க.குணராஜா. யாழ்ப்பாணம்: அன்பு வெளியீடு, 550/7, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1967. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி).

74 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 2.50., அளவு: 28×22 சமீ.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சைக்குரிய வினா-விடைகளை உள்ளடக்கியுள்ள இந்நூல், டிசம்பர் 1965 தொடக்கம் டிசம்பர் 1966 வரை வெளிவந்த க.பொ.த. புவியியல் வினாக்களையும் அவற்றுக்கான விடைகளையும் உள்ளடக்கியுள்ளது. டிசம்பர் 1965 புவியியல் 1,2, ஆகஸ்ட் 1966 புவியியல் 1,2, டிசம்பர் 1966 புவியியல் 1,2 ஆகிய ஆறு பரீட்சை வினாக்களையும் அவற்றுக்கான விடைகளையும் இந்நூல்  கொண்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 84697).     

ஏனைய பதிவுகள்

11642 நிகரி (கவிதைகள்).

மஜீத். அக்கரைப்பற்று: மஜீத், 1வது பதிப்பு, 2017. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ்). 36 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 10×14.5 சமீ. கிழக்கிலங்கைக் கவிஞர் மஜீத்தின் கவிதைகளுக்கு நிகரான