12071 – சைவ போதினி-ஐந்தாம் வகுப்பு.

விவேகானந்த சபை. கொழும்பு 13: விவேகானந்த சபை, 34, விவேகானந்த மேடு, 7வது பதிப்பு, டிசம்பர் 1972, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1960, 2வது பதிப்பு, நவம்பர் 1961, 3வது பதிப்பு, ஜுலை 1964, 4வது பதிப்பு, பெப்ரவரி 1967, 5வது பதிப்பு, நவம்பர் 1969, 6வது பதிப்பு, டிசெம்பர் 1971. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம்).

(4), 96 பக்கம், சித்திரங்கள், விலை: 95 சதம், அளவு: 18×12.5 சமீ.

விவேகானந்த சபையினர் தாங்கள் அகில இலங்கை அடிப்படையில் ஆண்டுதோறும் நடத்திவரும் சைவ சமய பாடப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குப் பயனுற வேண்டியும், இலங்கை அரசாங்க கல்வித் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகவும் இந்நூல் எழுதப்பட்டது. திருஞானசம்பந்தர் தேவாரம், அப்பூதியடிகள், கண்ணப்ப நாயனார், திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், நம்பியாண்டார் நம்பி, ஆற்றிலிட்ட பொன்னைக் குளத்தில் எடுத்தமை, கல் தோணியாக மிதந்தது, சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், சம்பந்தர் பொற்றாளமும் முத்துப் பல்லக்கும் பெற்றமை, நரியைப் பரியாக்கியது, மாணிக்கவாசகர் திருவாசகம், சைவசமயம், சிவபெருமான், திருக்கேதீச்சரம், திருவிசைப்பா (சேந்தனார்), நல்வினை தீவினை, திருநீறு, திருக்கோணேஸ்வரம், திருப்பல்லாண்டு (சேந்தனார்), நித்திய கருமம், கோயில்களுக்குச் செல்லுதல், கோயிலைச் சுத்தஞ்செய்தல், பூந்தோட்டத் தொண்டு, திருவிளக்கிடுதல், திருப்புராணம் (கந்புராணம், விருத்தாசல புராணம்), முன்னேஸ்வரம், கதிர்காமம், திருப்புகழ் (அருணகிரிநாதர்), நல்லூர்க் கந்தசுவாமி கோவில், செல்வச் சந்நிதி, நீதிப் பாடல்கள் (நல்வழி) ஆகிய 31 பாடங்களை இந்நூல் கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 9573).

ஏனைய பதிவுகள்

Página Nanja Encontrada

Content Bónus Aajogo Online Casino Acercade 2024 Caça Niquel Gratis Brasil Video Bingo Show Ball Gratis Aparelhar Caca Niqueis Online 2022 Tipos Puerilidade Busca A