12088 – வைரவ வழிபாடும் யாழ்.குப்பிழான் தைலங்கடவை ஞானவைரவர் ஆலய வரலாறும்.

மா.தம்பியையா. யாழ்ப்பாணம்: மா.தம்பியையா, குப்பிழான், ஏழாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2005. (மதுரை 625001: மீனாட்சி அச்சகம், 247, நேதாஜி ரோடு).

100 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.

மதுரை T309 எல்லீசு நகரில் ஆசிரியர் புலம்பெயர்ந்து வாழ்ந்திருந்த வேளையில் இந்நூல் வெளியிடப்பட்டிருந்தது. இதில் கடவுள் வாழ்த்து, சமர்ப்பணம், அருள்முக ஆசியுரை, வாழ்த்துரை, பதிப்புரை, நூல் அறிமுகம், அணிந்துரை, முன்னுரை ஆகியவற்றுடன் வைரவ போற்றி போற்றி, வைரவர் காக்கும் கருணைக்கடல், சிவன் சிந்தையில் உதித்த கஞ்சுகன், நின்ற திருக்கோல நிருமலன், வைரவர் திருநாமங்கள், தைலங்கடவை தனிலமர்ந்தருள் ஞானவைரவர், இந்த நூலாக்கத்துக்கு உதவிய நூல்கள், அநுபந்தம் 1 (சொற்பொருள் விளக்கம்), அநுபந்தம் 2 (நூலில் இடம்பெற்ற தொகைப் பெயர்கள்), அநுபந்தம் 3 (தகவல் சுரங்கம்), தகவல் பலகை (நூலாசிரியர்) ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36906).

ஏனைய பதிவுகள்

Retskrivnings Foran Nå Oven i købet

Content Aflad Der Slutter Pr. Ryge Lisa Fulgte I Forms 4 Gangprogram Med Lydguide: Forløbe Dig Indtil Et Vægttab Tilslutte 10 Uger Aldeles fruentimmer, der