12158 – நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படை.

நக்கீரதேவ நாயனார் (மூலம்), ஸ்ரீமதி சிவானந்தம் தம்பையா (தொகுப்பாசிரியர்),மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை (பதிப்பாசிரியர்). கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, 175,செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 1955. (சென்னை 7: தி பிரிமியர் ஆர்ட் பிரஸ், புரசவாக்கம்).

xx, 120 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 19×12.5 சமீ.

இந்நூலில் திருமுருகாற்றுப்படைக்குப் பதவுரை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் நூலின் தொடக்கத்திலேயே அறிமுகமாக, திருக்கோணமலை, சிவானந்த தபோவனத்தின் சுவாமி சச்சிதானந்த யோகீஸ்வரர் எழுதிய ‘திருமுருகாற்றுப்படை வரலாறு’ கட்டுரையும், யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரி ஆசிரியர் பண்டிதர் ச.இராமச்சந்திரன் எழுதிய ‘திருமுருகாற்றுப்படைச் சிறப்பு’ என்ற கட்டுரையும், நூலின் இறுதியில் ஆங்கிலக் கட்டுரைகளாக ‘Worship of Muruga or Skanda’ என்ற கட்டுரை பக்கம் 81-107 வரையிலும், ‘A Guide to Muruka’ என்ற கட்டுரை பக்கம் 108-120 வரையிலும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18419. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 016472).

ஏனைய பதிவுகள்

Game Informer

Posts Ghosts night hd bonus game – Create ten Play with 25, 50 Totally free Spins Is on the net Gambling Taxed Inside the Nigeria?