12380 – கூர்மதி (மலர் 4): 2006-2008.

வீ.எஸ்.இதயராஜா (பதிப்பாசிரியர்), எம்.மனோகரன், ஸ்ரீமதி த.இராஜதுரை, திருமதி றெஷியா நிஷாம்டீன் (உதவிப் பதிப்பாசிரியர்கள்). பத்தரமுல்ல: தமிழ் மொழி அலகு, கல்வி அமைச்சு, இசுறுபாய, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு: சேன் பிரின்ட், வெல்லம்பிட்டிய).

xxiii, 327 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ.

இவ்விதழில் ‘இலக்கிய கட்டுரைகள்” என்ற பிரிவுக்குள், நவாலியூர் சோமசுந்தரப் புலவர்: ஓர் அறிமுகம் (கிருஷ்ணபிள்ளை விசாகரூபன்), மண்ணும் மனித உறவுகளும் (க.கைலாசபதி), விஞ்ஞானம், மெஞ்ஞானம் இலக்கியம் என்ற நோக்கில் யோகக்கலை: நவீன யுகத்தின் மருத்துவம் (கனகசபாபதி நாகேஸ்வரன்), மொழியும் அதன் இயல்பும் (பண்டிதர் க.கந்தையா), பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் நாடகங்களில் பேச்சு மொழியின் செல்வாக்கு: (தேவகுமாரி சுந்தரராஜன்), இளைய தலைமுறையினரும் வாழ்வியல் விழுமியங்களும் (கே. ஆர் டேவிட்), மட்டு நகர் ஈந்த முத்தமிழ் வித்துவான் சரவணமுத்துப்பிள்ளை (ரஜனி நடராஜா), எங்கள் நினைவுகளில் சிவலிங்கம் என்றொரு ஆசிரியர் (லெனின் மதிவானம்), ஒட்டக்கூத்தரும் அவரது பணிகளும் (ஆர்.குணசேகரன்), கடவுள் அமைத்துவைத்த மேடை (மலர் சின்னையா), பழைய ஆத்திசூடியும் புதிய ஆத்தி சூடியும் ஒரு ஒப்பு நோக்கு (ச.கு.கமலச்சேகரன்), சிலேடைக் கவிநயம் (வ.சிவராசசிங்கம்), இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகளும் படைப்புக்களும் (பரராஜசிங்கம் இராஜேஸ்வரன்), வாழ்வியல் தேடல்கள்: எதிரிகள் (பருத்தியூர் பால.வயிரவநாதன்), இணையம் பிள்ளைகளை வழிகெடுக்க இன்றைய பெற்றோர்கள் பொறுப்பாளிகளா? (எம்.எம்.ஸமட்), இலக்கியமும் விமர்சனமும் (அருட் சகோ.ஜோசப் ஜெயகாந்தன்), ஈழத்துத் தமிழ் நாவல் வளர்ச்சியில் இளங்கீரன் (றமீஸ் அப்துல்லாஹ்), சில்லையூர் செல்வராசனின் கவிதைகளில் மேலோங்கியிருப்பது தனிமனித வாதம் (அ.முகம்மது சமீம்), திராவாட மொழியியல்: ஒரு கண்ணோட்டம் (ச.அகத்தியலிங்கம்), குண்டலகேசி – வளையாபதி (ச.தனஞ்சயராசசிங்கம்), முத்தமிழ் கலாநிதி பிரம்மஸ்ரீ வீரமணி ஐயர் என்னும் கலை அரும்பு மலர்கிறது (திருமதி புவனேஸ்வரி வேல்நிதி), பாரதியும் தேசியமும் (சி.காண்டீபன்), நாட்டார் இலக்கியம் (தே.கருணாகரன்), எமது நாட்டில் அழிப்பேரலை அனர்த்தம் (ந.டினோஜா), ஜீவா என்னும் கலை இலக்கியப் போட்டி: (பொன்னீலன்), தமிழ்க் காப்பியங்களில் அவல நாயகர்கள் (து.இளங்குமரன்), திறனாய்வு (ப.தாட்சாயிணி) ஆகியஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ‘கல்வியியற் கட்டுரைகள்” என்ற பிரிவில் பீட்டர் ட்றக்கறின் எதிர்காலவியல் பற்றிய மற்றும் பல்வேறு பயன்னுள்ள கருத்துக்கள் (சோ. சந்திரசேகரன்), கல்வி நிறுவனங்களில் பகிடிவதையையும் ஏனைய வன்முறை களையும் தடுப்பதற்கான சட்டக் கட்டமைப்பின் சில அம்சங்கள் (அ.சர்வேஸ்வரன்), புராதன இந்தியக் கல்வி: சில குறிப்புகள் (வி.சிவசாமி), ஆசிரியர் கல்வியின் அவசியம் – நிலை – போக்கு (திருநாவுக்கரசு கமலநாதன்), ஒரு கல்வியியல் நூலாகத் திருக்குறள் (ந.இரவீந்திரன்), விசேட தேவையுள்ளோரின் கல்வியும் 370.05 கல்விநிறுவனங்களின் ஆய்விதழ்கள், ஆண்டு மலர்கள்நூல் தேட்டம் – தொகுதி 13 221 உரிமைகளும் (ஏ.ஆர்.எம்.ஜிப்ரி), மின்கல்வியும் தமிழ்ச் சூழலும் – ஓர் எளிய அறிமுகம் (எஸ்.முரளிதரன்), ஆசிரியர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உறவு (இளைய அப்துல்லாஹ்), மொழி விருத்தியில் சிறுவர் ஆக்கங்கள் (ந.பார்த்திபன்), ஈழத்தில் மேனாட்டார் வருகைக்கு முன்னர் நிலவிய கல்விசார் அறிவிலக்கிய பாரம்பரியம் (க.இரகுபரன்), முகாமைக் கல்வியும் கற்றலும் (பூ.சோதிநாதன்), கல்வியின் முகாமைத்துவமும் மதிப்பீடும் ஓர் நோக்கு (ணு.தாஜுதீன்), சமயக் கல்வி அறிவுக்கான பாடமல்ல, வாழ்க்கைப் பாடம் (அருட்தந்தை ஜெராட் டீ ரொசய்ரோ), ஆரம்பக் கல்வி கற்பித்தலில் அரங்கக் கலையின் பங்கு (செ.மோகநாதன்), ஆசிரியத்துவ வாண்மை விருத்தியில் மொழிப் பயன்பாட்டின் முக்கியத்துவம் (ஜெ.சற்குருநாதன்), கற்பித்தல் மாதிரிகள் (ப.மு.நவாஸ்தீன்), பிள்ளைகளின் ஆளுமை விருத்தியில் குடும்பத்தின் பங்கு (கோகிலா மகேந்திரன்), தாய்மொழி கற்பிப்பதில் துணைச் சாதனங்களின் பங்களிப்பு (நடேசபிள்ளை ஞானவேல்), ஆசிரிய ஆலோசகர் சேவையும் கல்வித்தர மேம்பாடும் (விசேட கல்வியும் விசேட உதவியும் தேவைப்படும் பிள்ளைகள் (கு.சண்முகம்), உலகமயமாதலில் இந்துசமயக் கல்வி (என்.எஸ்.வாசீகன்)ஆகிய கட்டுரைகள் அடங்குகின்றன. கவிதைகள் என்ற பிரிவுக்குள் சோமசுந்தரப் புலவர், இ.முருகையன், மஹாகவி, வயலற் சந்திரசேகரம், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், இரா.கிருஷ்ணபிள்ளை (இராகி), நித்தியஜோதி, பெ.இராசையா, மு.பஷீர், சோலைக்கிளி, சிவகுமார்.சி., சண்முகம் சிவலிங்கம், ஹம்சத்வனி, அனார், தமயந்தி, இளவாலை விஜயேந்திரன், அ.சங்கரி, ஆழியாள், பாமினி, ஜஸ்மின், அ.அன்றுகிறி, எம்.ரீ.எப்.ரிக்ஸானா, எம்.ரி.பி. அமாறூல்லாஹ், குந்தவி ஆகியோரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. சிறுகதைப் பிரிவில், அழியாப் பொருள் (சீ.வைத்தியலிங்கம்), லண்டன் விசா (எம்.என்.எம்.அனஸ்), மன்னிப்போம்…. (ஷீலா சிறிதரன்), நட்புக்காக…. (முனையூரான்), சீதனப் புயலிலே சிக்குண்ட வள்ளம் (எம்.அருசியா மீரான்), முன்னேற்றம்…. (திக்குவல்லை கமால்), பெண்ணினமே தயங்காதீர் (எம்.எப்.பஹீதா), அடிக்கல்லும் அரசியல்வாதிகளும் (வத்துமுல்லை நேசன்), வாழ்வியல் (தம்புசிவா) ஆகிய சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45663.நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 008459).

ஏனைய பதிவுகள்

British Discover Odds

Blogs Discover Bonus Offers Nba Betting Tips Zero Incentives, But Higher Limits Golfs Number Honor Money From the Majors As well as $17 Million From

Diamond Blitz 100 Slot Review 2024

Content Jackpot Abeloura Is Redefining Casino Gaming With Innovative – Floating Dragon Megaways Slot Machine Book Of The Fallen Almighty Jackpots Minimum And Maximum Bet