12455 – உடப்பு தமிழ் மகாவித்தியாலயம : நூற்றாண்டு விழா சிறப்பிதழ் 2004.

நடராஜா பத்மானந்தன் (இதழாசிரியர்). புத்தளம்: பு/உடப்பு தமிழ் மகா வித்தியாலயம், பிரதான வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (கொழும்பு 13: யூ.கே. பிரின்டர்ஸ், 103, விவேகானந்தா மேடு).

xvii, 148 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.

இச்சிறப்பிதழில், ஆசியுரைகள், வாழ்த்துரைகள், அறிக்கைகள் என்பவற்றுடன், பாடசாலை கீதம் (இரா.பாலகிருஷ்ணன்), பாடசாலை வரலாறு (ச.கோபாலன்), உள்ளத்தைத் தொட்டு நிற்கும் உடப்பு (க.சின்னத்தம்பி), கலையுணர்வில் நினைவில் நிற்பவை (ஆர்.பாலகிருஷ்ணன்), பாடசாலையின் விளையாட்டுத்துறை (இரா.வேலாயுதன்), உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தின் நூறாவது ஆண்டு நிறைவில் உடப்பூரின் கல்வி (வ.சிவலோகதாசன்), சமய வளர்ச்சியில் பாடசாலை (பெரி.சண்முகநாதன்), உடப்புப் பிரதேசத்தில் மக்கட் பெயர்கள்: ஓர் ஆய்வு அறிமுகம் (கிருஷ்ணன் ஸ்ரீஸ்கந்தராசா), புத்தளம் மாவட்டத்தில் மகப்பேற்று நிபுணர் பேராசிரியர் அ. சின்னத்தம்பி அவர்களின் சைவப்பணிகள் (வீ. நடராஜா), எமது ஊரில் வெளிநாட்டு மோகத்தினால் ஏற்படும் சமூக பொருளாதார விளைவுகள் (ளு.ஐங்கரசோதி), உடப்பூரில் முத்தமிழ் வளர்ச்சி (ச.கோபாலன்), கல்வி தொடர்பான பெற்றோர் அணுகுமுறை (மா.சின்னத்தம்பி), தரமான கல்விக்கான கிரயம் (உலகநாதர் நவரட்ணம்), மாணவர்களைக் கல்வியின்பால் திசைதிருப்புவது ஆசிரியர் செய்யக்கூடியதும் செய்ய வேண்டியதுமான பணியாகும் (இரா.பாலகிருஷணன்), புதிய கல்விச் சீர்த்திருத்தமும் ஆசிரியரும் (ஆ. நிர்மலகாந்தன்), உளவியல் தேவைகள் (வை. இராமச்சந்திரன்), கவிதை நயமும் அழகியற் பரிமாணங்களும் (சபா. ஜெயராசா), 20 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் இசை வளர்ச்சி (சிவானந்தன் ஷாழினி), உலகப் புகழ் பெற்ற மறுமலர்ச்சிக் கால ஓவியர் லியானடோ டாவின்சி (நா.ஸ்ரீதர்ஷன்), யாழ்ப்பாணத் தமிழ் மன்னர் காலமும் தமிழ் இலக்கிய வளர்ச்சியும் (துரை.மனோகரன்), அன்புள்ள பெற்றோர்களே (ஆர்.பாலகிருஷ்ணன்), தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சிப் போக்கு (சீ.எம்.எஸ்.ஜெனீஸா), கல்வியும் ஆசானும் (கமலேஸ்வரன் மேகலா), நல்லாசிரியர் பண்புகள், உதவாத மனித நேயம் துன்பஞ் சேர்க்கும் (எஸ்.எம்.ஏ.முத்தலிப்), அன்புள்ள ஆசிரியருக்கு (ஆர்.பாகிருஷ்ணன்), எங்கள் தமிழ் மொழி (இரா. பாலகிருஷ்ணன்), அமெரிக்கா மீதான செப்டெம்பர் 11 தாக்குதலும் இலங்கையின் சமாதான முயற்சிகளும் (எஸ்.ஐ.கீதபொன்கலன்), மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை விளங்கிக் கொள்ளல் (ச.பாஸ்கரன்), சைவசித்தாந்தத்தில் உபநிடதங்கள்: ஒரு நோக்கு (முருகேசு கௌரிகாந்தன்), வேலைத்தளங்களில் காணப்படுகின்ற முரண்பாடுகளும் முகாமை செயற்றிறனில் அதன் தாக்கமும் (ளு.மகேஸ்வரன்) ஆகிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32913. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 009723).

ஏனைய பதிவுகள்

12563 – தமிழ் மலர்: ஏழாம் புத்தகம்.

நூல் வெளியீட்டுக் குழு. கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 2வது பதிப்பு, 1967, 1வது பதிப்பு, 1966. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). (4), viii, 295 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 2.80,

+55 No-deposit Bonus Codes

Content Ways to get Totally free Revolves Ideas on how to Allege A free of charge Revolves Incentive How come Nz Web based casinos Provide

12744 – தமிழ் இலக்கியம்: ஆண்டு 10-11: விளக்கக் குறிப்புகள்.

தமிழவேள் (இயற்பெயர் க.இ.க.கந்தசாமி). கொழும்பு 12: குமரன் புத்தகசாலை, 201, டாம் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1990. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி). (4), 140 பக்கம், விலை: