12480 – தமிழ்மொழித் தினம் 1994.

தமிழ்த்தின விழாக் குழு. கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, கொழும்பு வடக்கு கல்விக் கோட்டம், கல்வி இராஜாங்க அமைச்சு, 1வது பதிப்பு, ஜுன் 1994. (கொழும்பு 13: ரிபாய் அச்சகம், 143/9, ஜிந்துப்பிட்டி வீதி).

(66) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×18 சமீ.

கொழும்பு வடக்கு கல்விக் கோட்ட தமிழ் மொழி மூலப் பாடசாலைகளின் தமிழ்மொழித் திறன் விழாவை முன்னிட்டு வெளியிடப்படும் சிறப்பு மலர் இது. சமகாலத்தில் நாடளாவிய ரீதியில் நடைபெற்றுவந்த தமிழ்மொழித் திறன் போட்டிகள் தமிழ்மொழி மூல மாணவர்களின் ஆக்கத்திறன்களை மதிப்பீடு செய்யும் சிறந்த உரைகல்லாக அமைந்திருந்தன. அதற்குச் சாட்சியாக ஆசியுரை, வாழ்த்துரைகளுக்கும் விளம்பரங்களுக்கும் அப்பால், இம்மலரில் மாணவர்கள், ஆசிரியர்களின் படைப்பாக்கங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34615).

ஏனைய பதிவுகள்