த.பரமேஸ்வரன். கொழும்பு 6: திருமதி நிஷாந்தினி பரமேஸ்வரன், யுப்பிட்டர் பதிப்பகம், 17, சாளிமென்ட் ரோட், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 2001. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
79 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14.5 சமீ.
கொழும்பு வெஸ்லிக் கல்லூரியின் ஆசிரியரும் குட்டி மாஸ்டர் என அறியப்பட்ட வருமான த.பரமேஸ்வரன் அவர்கள் எழுதிய நூல் இதுவாகும். அளக்கும் கருவிகள், அம்புக்குறிப் படங்கள், உங்களுக்குத் தெரியமா?, வரைவிலக்கணங்கள், சமன்பாடுகள், சர்வதேச அலகுகள், நோய்கள், அட்டவணைத் தரவுகள், வரைபுகள், விதிகள், பகுதிகளின் தொழில்கள், சுருக்கக் குறிப்புகள், விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்புகளும், மூலகச் சக்கரங்கள், இரசாயனச் சமன்பாடுகள், வேறுபாடுகள், ஆகிய அத்தியாயங்களினூடாக அடிப்படை எண்ணக்கருக்களை முற்றிலும் உள்ளடக்கியதாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.