12653 – கணக்கியற் சுருக்கம்: பகுதி II .

வே.அழகேசன். யாழ்ப்பாணம்: வே.அழகேசன், 1வது பதிப்பு, 1980. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ பார்வதி அச்சகம், (288), 536, ஆஸ்பத்திரி வீதி).

பக்கம் 375-722, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.

கணக்கியற் சுருக்கம் நூலின் முதற்பாகம் 374 பக்கங்களில் வெளிவந்துள்ள நிலையில் இவ்விரண்டாம் பாகம் தொடர் பக்க இலக்கங்களுடனும் அத்தியாயங்கள் 10 முதல் 21 வரையிலுமான விடயதானங்களுடன் வெளிவந்துள்ளது. இவ்விரண்டாம் பாகத்தில் வங்கிக் கணக்கிணக்கக் கூற்று, மீட்டல் அப்பியாசம் ஐஐ, ஒப்படைக் கணக்குகள், பங்குடமை, தற்சமனாக்கும் பேரேடுகள், பரும்படிச் செய்கைக் கணக்கு, பகுதிக் கடைக் கணக்குகள், கூட்டு முயற்சிக் கணக்குகள், கொள்ளல் கொடுத்தற் கணக்குஃவருமானச் செலவுக் கணக்கு, நிறைவில் பதிவுகளிலிருந்து கணக்குகள் தயாரித்தல், மீட்டல் அப்பியாசம் ஐஐஐ, வினாப் பத்திரங்கள், விடைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35322).

ஏனைய பதிவுகள்

12304 – கல்விக் கொள்கையும் முகாமைத்துவமும்.

மா.செல்வராஜா. மகரகம: கல்வி முகாமைத்துவ அபிவிருத்தித்துறை, தேசியகல்வி நிறுவகம், 2வது திருத்திய பதிப்பு, 1997, 1வது பதிப்பு, 1995. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 1-B, P.T. டீ சில்வா மாவத்தை). iv, 128 பக்கம், விளக்கப்படங்கள்,

14135 தாந்தாமலை மாட்சி: தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய மலைப்பிள்ளையார் கோயில் குடமுழுக்கு மலர்-2011.

பாலிப்போடி இன்பராஜா (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: தாந்தாமலை முருகன் ஆலய பிள்ளையார் கோயில் குடமுழுக்கு விழா மலர்க்குழு, கொக்கட்டிச்சோலை, 1வது பதிப்பு, ஜுலை 2011. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி). 215 பக்கம், 24 தகடுகள்,

12596 – உயர்தர மாணவர் பௌதிகம்: வெப்பவியல்.

அ.கருணாகரர் (மூலம்), க.புவனபூஷணம் (மீள்பார்வை). யாழ்ப்பாணம்: மாசில் பதிப்பகம், ஈச்சமோட்டை, 2வதுபதிப்பு, ஆண்டு விபரம்தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்:நாமகள்அச்சகம்,319,காங்கேசன்துறை வீதி). iv, (4), 216 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. க.பொ.த.ப. (உயர்தர)