ரதிராணி யோகேந்திரராஜா. யாழ்ப்பாணம்: ரதிராணி
யோகேந்திரராஜா, வணிகவியல் துறை, முகாமைத்துவ வணிகவியல் புலம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2002. (யாழ்ப்பாணம்: உயர்
கல்விச் சேவைகள் நிலையம்).
321 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 24.5×19 சமீ.
Cost Accounting எனப்படும் கிரயக்கணக்கியல் பற்றிய இந்நூல், நவீன உற்பத்திச் சூழலில் முகாமைத்துவ நோக்கங்களை நிறைவேற்ற இன்றியமையாததாக உள்ளது. ஒரு நிறுவனத்தின் திட்டமிடல் தீர்மானமெடுத்தல் கட்டுப்படுத்தல் போன்ற முகாமைத்துவக் கருமங்களுக்கு கிரயக் கணக்கியலே உறுதுணையாக அமைகின்றது.
இந்நூல் கிரயக் கணக்கியலை அறிமுகம், கிரய மூலங்களும் கிரய வகைப்படுத்தலும், மூலப்பொருள் கிரயம், கூலிக்கிரயம், மேந்தலைகள், எல்லைக் கிரயவியலும் உள்ளடக்க கிரயவியலும், கிரயக்கணக்குப் பதிவியல் ஆகிய ஏழு அத்தியாயங்களில் படிமுறையில் விளக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30125).