12656 – கிரயக் கணக்கீடு: அலகு 6-2: கூலிக்கிரயமும் மேந்தலைக் கிரயமும்.

கு.கலைச்செல்வன். கொழும்பு 6: கு.கலைச்செல்வன், எம்.எஸ்.பப்ளிக்கேஷன்ஸ், இல. 6, கொலிங்வுட் பிளேஸ், வெள்ளவத்தை, 3வது பதிப்பு, பெப்ரவரி 2002, 1வது பதிப்பு, 1997, 2வது பதிப்பு, 1999. (கொழும்பு: யூ.கே.பிரின்டர்ஸ்).

103 பக்கம், அட்டவணை, விலை: ரூபா 120., அளவு: 25×18 சமீ.

Cost Accounting எனப்படும் கிரயக் கணக்கீட்டுப் பாடத்திட்டத்தில் அலகு 6-2 ஆக வெளிவரும் இப்பாகத்தில் கூலிக்கிரயமும், மேந்தலைக் கிரயமும் ஆகிய இரு விடயங்கள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. கூலிக் கிரயம் என்ற பகுதியில் அறிமுகம், நேரப் பதிவு, செயற்படுகாலப் பதிவு, கூலிக் கொடுப்பனவு முறைகள், நேரக்கூலி முறை, துண்டுக்கூலி முறை, மிகை ஊதியத்திட்டம் (கல்சி முறைஃகல்சிவெயர் முறைஃ ரொவான் முறைஃபாத் முறை), பயிற்சிகள், சம்பளப்பட்டியல், சம்பளப்பட்டியல் தொடர்பான பயிற்சிகள், கடந்தகாலப் பரீட்சை வினாக்கள்-கூலிக்கிரயம், தொழிலாளர் புரழ்வுவீதம், கிரயக்கட்டுப்பாடும் வேலை ஆய்வும் ஆகிய பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. மேந்தலைக் கிரயம் என்ற பிரிவில் அறிமுகம், முதலாம் கட்டப் பகிர்வு, இரண்டாம் கட்டப் பகிர்வு, பயிற்சி, மேந்தலைச் செலவுகளை உள்ளடக்குதல், கடந்தகாலப் பரீட்சை வினாக் கள் (மேந்தலைக் கிரயம்) ஆகிய பாடங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36985).

ஏனைய பதிவுகள்

Bier Haus tragaperras en internet

Content Sign up for exclusive bonuses with a personal account! | ranura majestic forest ¿La manera sobre cómo consigo las tiradas gratuito desprovisto tanque de