12658 – பங்குடமைக் கணக்கீடு- அலகு 9.

கு.கலைச்செல்வன். கொழும்பு 6: மொட் ஸ்டடி சென்டர், 33, பொஸ்வெல் பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 1998. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).

iv, 228 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 190.00, அளவு: 21×14 சமீ.

கணக்கியலில் Partnership Accounting பற்றிய பாடப்பரப்பை விளக்கும் நூல் இது. பங்குடமை அறிமுகம், உத்தரவாத இலாபப் பங்கு, பற்று வட்டி, பங்குடமை முடிவுக்கணக்குப் பயிற்சிகள், பங்குடமை முடிவுக்கணக்கு பயிற்சி விடைகள், நன்மதிப்பு, பங்காளர் இலாபநட்ட விகிதாசார மாற்றம், பங்காளர் சேர்தலும் சொத்துக்கள் மறுபடி விலைமதித்தலும், பங்காளர் சேர்தல் முடிவுக் கணக்குப் பயிற்சிகள், பங்காளர் சேர்தல் முடிவுக் கணக்குப் பயிற்சி விடைகள், பங்காளர் சேர்தல் கடந்தகாலப் பரீட்சை வினாக்கள், பங்காளர் ஓய்வுபெறல், பங்காளர் ஓய்வுபெறல் முடிவுக்கணக்குப் பயிற்சிகள், பங்காளர் ஓய்வுபெறல் முடிவுக்கணக்குப் பயிற்சி விடைகள், பங்காளர் ஓய்வுபெறல் கடந்தகாலப் பரீட்சை வினா 1994, பங்காளர் ஓய்வுபெறுதலும் சேர்தலும், பங்காளர் ஓய்வுபெறுதலும் சேர்தலும் பயிற்சி வினாக்கள், பங்காளர் ஓய்வுபெறுதலும் சேர்தலும் பயிற்சி விடைகள், பங்காளர் ஓய்வுபெறுதலும் சேர்தலும் கடந்தகாலப் பயிற்சி வினாக்கள் 1997 ஆகிய 20 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36991).

ஏனைய பதிவுகள்

14215 தெய்வீக பாடல்கள்.

பொன். வல்லிபுரம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் தேவஸ்தானம், 1வது பதிப்பு, 1991. (கொழும்பு 10: இம்பீரியல் பிரஸ், 25, முதலாம் டிவிஷன், மருதானை). 114 பக்கம், விலை: ரூபா 50.00,

12636 – பரராசசேகரம்: பித்தரோக நிதானமும் சிகிச்சையும்.

ஐ.பொன்னையாபிள்ளை. யாழ்ப்பாணம்: மீள்பதிப்புக் குழு, அகஸ்தியர் வைத்தியசாலை ரூ மருந்தகம், 29, மூத்தவிநாயகர் வீதி, நல்லூர், 2வது பதிப்பு, நவம்பர் 1999, 1வது பதிப்பு, 1934. (யாழ்ப்பாணம்: தயா பிரின்டர்ஸ், 138, நாவலர் வீதி).

12598 – நவீன உயர்தர இலகு மாணவர் பௌதிகம்: அலகு 6: ஓட்ட மின்னியல், வெப்ப விளைவு, மின்காந்தத் தூண்டல்.

அ.கருணாகரன். கொழும்பு 15: அ.கருணாகரன், அபிராமி பதிப்பகம், இல. 68யு, எலிஹவுஸ் வீதி, திருத்திய 2வது பதிப்பு, பெப்ரவரி 2000, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13: யுனைட்டட் மேர்ச்சன்ட்ஸ் லிமிட்டெட், 529/19,புளுமெண்டால்

12915 – கரவை ஏ.சீ.கந்தசாமி நினைவுக் கருத்தரங்கு கட்டுரைத் தொகுப்பு.

வி.ரி.தமிழ்மாறன், கொன்சன்ரைன், சோ.சந்திரசேகரம். கொழும்பு: பாரதி வெளியீட்டகம், 1வது பதிப்பு, டிசம்பர் 1995. (தெகிவளை: டெக்னொ பிரின்ட், இல. 6, ஜெயவர்த்தன அவென்யூ). (4), 28 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 21

12759 – தேசிய தமிழ் சாகித்திய விழா 1991: சிறப்பு மலர்.

ஏ.எம்.நஹியா (பதிப்பாசிரியர்). கொழும்பு: இந்து சமய, தமிழ் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சரின் அலுவலகம், 1வது பதிப்பு, 1991. (கொழும்பு 12: குமரன் பதிப்பகம், 201, டாம் வீதி). (22), 168ூ(36) பக்கம், தகடுகள்,