கு.கலைச்செல்வன். கொழும்பு 6: மொட் ஸ்டடி சென்டர், 33, பொஸ்வெல் பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 1998. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).
iv, 228 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 190.00, அளவு: 21×14 சமீ.
கணக்கியலில் Partnership Accounting பற்றிய பாடப்பரப்பை விளக்கும் நூல் இது. பங்குடமை அறிமுகம், உத்தரவாத இலாபப் பங்கு, பற்று வட்டி, பங்குடமை முடிவுக்கணக்குப் பயிற்சிகள், பங்குடமை முடிவுக்கணக்கு பயிற்சி விடைகள், நன்மதிப்பு, பங்காளர் இலாபநட்ட விகிதாசார மாற்றம், பங்காளர் சேர்தலும் சொத்துக்கள் மறுபடி விலைமதித்தலும், பங்காளர் சேர்தல் முடிவுக் கணக்குப் பயிற்சிகள், பங்காளர் சேர்தல் முடிவுக் கணக்குப் பயிற்சி விடைகள், பங்காளர் சேர்தல் கடந்தகாலப் பரீட்சை வினாக்கள், பங்காளர் ஓய்வுபெறல், பங்காளர் ஓய்வுபெறல் முடிவுக்கணக்குப் பயிற்சிகள், பங்காளர் ஓய்வுபெறல் முடிவுக்கணக்குப் பயிற்சி விடைகள், பங்காளர் ஓய்வுபெறல் கடந்தகாலப் பரீட்சை வினா 1994, பங்காளர் ஓய்வுபெறுதலும் சேர்தலும், பங்காளர் ஓய்வுபெறுதலும் சேர்தலும் பயிற்சி வினாக்கள், பங்காளர் ஓய்வுபெறுதலும் சேர்தலும் பயிற்சி விடைகள், பங்காளர் ஓய்வுபெறுதலும் சேர்தலும் கடந்தகாலப் பயிற்சி வினாக்கள் 1997 ஆகிய 20 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36991).