வி.என்.எஸ்.உதயசந்திரன். யாழ்ப்பாணம்: உமா வெளியீட்டகம், 43, பொன்னம்பலம் வீதி, அரியாலை, 1வது பதிப்பு, ஜனவரி 1998. (சென்னை 5: பக்கம் மறுதோன்றி (Pயபந ழுககளநவ), 6ஃ2, தேவராசன் தெரு).
(8), 9-64 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 75., அளவு: 21×14 சமீ.
இந்நூல் ஆரம்ப வகுப்பு மாணவர்கள் சுயமாகத் தமது திறமைகளை வெளிக் கொணரத் துணைசெய்கின்றது. நிறந்தீட்டுதல் என்பது ஒரு கலையாகும். நுட்பமாக நிறந் தீட்டுகின்றபோது, அந்தச் சித்திரம் உயிரோட்டமுள்ள சித்திரமாக மாறுகின்றது. நிறந்தீட்டும் பயிற்சி சிறுவர்களின் தசைப் பயிற்சிக்கும் நுண்ணறிவு விருத்திக்கும் உறுதுணை புரிகின்றது. இந்நூலாசிரியர் கொழும்பு விவேகானந்த கல்லூரியின் ஆசிரியராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29546).