யோ.புரட்சி (தொகுப்பாளர்), யமுனா நித்தியானந்தன் (பதிப்பாசிரியர்). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, ஜனவரி 2017. (கொழும்பு 13: சாய் அச்சகம், இல. 2, இரட்ணம் வீதி).
1861 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 3500., அளவு: 30 x 22 சமீ., ISBN: 978- 955-4096-00-4.
இந்தியா, தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் மற்றும் இந்திய பிற மாநிலங்கள், இலங்கையின் அனைத்து பிரதேசங்கள் என்பனவற்றின் கவிஞர்களுடன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, அயர்லாந்து, பஹ்ரைன், மியன்மார், கனடா, சீனா, டென்மார்க், துபாய், ஈரான், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஹொங்கொங், இந்தோனேசியா, இத்தாலி, குவைத், மலேசியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, போர்த்துக்கல், கட்டார், ரஷ்யா, சிங்கப்பூர், சவூதி அரேபியா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, தைவான், தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 1098 கவிஞர்கள் பற்றிய குறிப்புகள், புகைப்படங்கள் சகிதம், அவர்களது மாதிரிக் கவிதைகளும் தேடித் தொகுக்கப்பெற்றுள்ளன. ஈழத்துக் கவிதைத் துறையில்அதிக செலவில் பெருமெடுப்பில் விழாக்கண்ட உலகத் தமிழர்களின் கவிதைத் தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 261932CC).