12774 – காதல் வந்த சாலை: காதல் கவிதைகளின் சங்கமம்.

சமரபாகு சீனா உதயகுமார். வல்வெட்டித்துறை: குபேந்திரா பதிப்பகம், கூனன் தோட்டம், சமரபாகு, 1வது பதிப்பு, ஜுன் 2016. (யாழ்ப்பாணம்: அன்றா பிறின்ரேர்ஸ், கஸ்தூரியார் வீதி).

viii, 50 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5 x 14.5 சமீ., ISBN: 978-955-43074-0-7.

இது ஒரு நெடுங்கவிதைத் தொகுதி. காதல்வயப்பட்ட ஓர் இளைஞனின் கவித்துவ அரிதாரம் பூசிய புதுக்கவிதை வடிவிலான தொடர்ச்சியான ஒரு நெடுங்கவிதையாகக் காணமுடிகின்றது. திரைப்படப் பாடல் வரிகளை நினைவூட்டும் வகையிலும் கவர்ச்சியான இளம் பெண்களின் புகைப்படங்களுடனும் ஜனரஞ்சக வெளியீடாக அமைந்துள்ளது. காதல் உணர்வுகளை மிகத்துல்லியமாக வெளிப்படுத்த கவிஞர் முனைந்துள்ளார். ஒவ்வொரு பக்கங்களும் படங்களையும் அவற்றுக்குப் பொருத்தமான கவிதைகளையும் கொண்டதாக அமைந்துள்ளது. (இந்நூல் யாழ்ப் பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 250627CC).

ஏனைய பதிவுகள்