12776 – தேடலின் வலி (கவிதைகள்).

ரமேஷ் வவுனியன். ஜேர்மனி: ரமேஷ் வவனியன், 1வது பதிப்பு, ஜனவரி 2017. (வவுனியா: கலைமகள் அச்சகம், இல. 50, சந்தை சுற்றுவட்ட வீதி).

94 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5 x 12.5 சமீ.

புலம்பெயர் வாழ்வில் ஏற்படும் அவலத்தின் தாக்கத்தினால் உள்ளத்தில் ஏற்படும் உணர்வின் அதிர்வுகளாக இக்கவிதைகள் மலர்ந்திருக்கின்றன. ரமேஷ் வவுனியன் இலங்கையில் வவுனியா நொச்சிமோட்டையில் பிறந்தவர். இவரது பெற்றோர் வீரசிங்க வவுனியன்-கமலநாயகி ஆகியோராவர். தற்பொழுது யேர்மனியில் புலம்பெயர்ந்து குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். மாணவனாக இருந்தபோது 1988இல் ‘தமிழ் மாணவர் நற்பணி மண்றம்’ எனும் அமைப்பை இலங்கையில் தோற்றுவித்தார். பின்னர் ஜரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்து ‘தமிழ் இணைய வானொலி’ எனும் இணைய வானொலியை இரண்டாயிரம் ஆண்டு யேர்மனியில் ஆரம்பித்தார். யேர்மனியிலிருந்து வெளியான ‘இளைஞன்’ சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் இருந்தார். கவிஞரான இவர், பல வானொலி நாடகங்களை எழுதி தயாரித்து நடித்துமிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

12299 – கல்வி பயிற்றலின் அத்திவாரம்.

எச்.எஸ்.பெரேரா. மதராஸ்: லாங்மன்ஸ் க்ரீன் அண்ட் கம்பனி லிமிட்டெட், 36 ஏ, மௌன்ட் ரோட், 1வது பதிப்பு, 1932. (மதராஸ்: எவிரிமான் பிரஸ்). xii, 112 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.

12235 – மனித உரிமைகள், அரசியல் மோதலும் இணக்கப்பாடும்.

இயன் மார்ட்டின். கொழும்பு 8: இனத்துவ ஆய்வுகளுக்கான சர்வதேச நிலையம், கின்சி றெரஸ், 1வது பதிப்பு, 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 22 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை,

12116 – வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய முகபத்திர வட்ட (வேசரம்) சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா மலர் 2001.

அகளங்கன் (மலராசிரியர்). வவுனியா: வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2001. (வவுனியா: நியூ வன்னிகுயிக் அச்சகம், 140/2, கண்டி வீதி). 88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14041 ஈகையின் உயர்வு.

வே.கனகசபாபதி ஐயர். யாழ்ப்பாணம்: ஸ்ரீ வே.கனகசபாபதி ஐயர்,வேதாகம பண்டிதர், நல்லூர், 1வது பதிப்பு, 1917. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்). 36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13 சமீ. யாழ்ப்பாணம் சைவசித்தாந்த மகா சமாசத்தின்

12588 – கணிதம் தரம் ; 6.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 3வது பதிப்பு, 2000, 1வது பதிப்பு, 1998, 2வது பதிப்பு, 1999. (கொழும்பு 15: கலர் பிரின்ட்ஸ் அச்சகம், 712, புளுமெண்டால் வீதி).

14655 வலித்திடினும் சலிக்கவில்லை: கவிதைத் தொகுப்பு.

ஷியா (இயற்பெயர்: கே.ஷிபானா). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/663/675 பி.டி.எஸ். குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2019. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (7), 8-88 பக்கம்,