12868 – உலக வரலாறு: மூன்றாம் பாகம்.

த.இராமநாதபிள்ளை. யாழ்ப்பாணம்: த.இராமநாதபிள்ளை, பருத்தித்துறை, 1வது பதிப்பு, 1953. (யாழ்ப்பாணம்: சைவப் பிரகாச யந்திரசாலை).

vi, 170 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு 21.5 x 14 சமீ.

இந்நூல் பதினாறாம் அதிகாரம் முதல் பத்தொன்பதாம் அதிகாரம்வரை நான்கு அதிகாரங்களையும், 30 பாடங்களையும் உள்ளடக்கியது. மேனாட்டரசுகள் (பிராஞ்சியர் அரசியற் புரட்சி, சுயாதீனவியக்கம், இத்தாலியர் தேசியம், செருமானியர் இணையரசு, ரூஷியர் கோல்), யந்திர காலம் (கைத்தொழில் முறை மாற்றம், துருக்கர் இராச்சியம், பிரித்தானியர் துணையரசு, இந்தியா, அமெரிக்க ஐக்கியக் குடியரசு, ஜப்பானும் சீனாவும், ஐரோப்பியர் மாயுத்தம், அங்கிலர் கல்வி நிலையங்கள், பொருளுடைமை, பொதுவுடைமை), இலங்கைஅங்கிலர் கோல் (அங்கிலர் கீழிந்திய வணிகர் கூட்டம், அங்கிலர் முடியாட்சி, அங்கிலர் ஆட்சியின் பலாபலன், காப்பி தேயிலை ரப்பர், கமம், கல்வி, உள்நாட்டரசியல், பிரயாண வசதிகள், அரசியற் சீர்திருத்தம், சுயாதீன விலங்கை), இக்காலவுலகு (இந்தியத் தேசியமும் காந்தியடிகளும், மேனாட்டார் வாழ்க்கை, சாதியும் நாகரிகமும், உலகமாயுத்தம், சுயாதீனவிந்தியா) ஆகிய தலைப்புகளில் இம் மூன்றாம் பாகத்தில் உலக வரலாறும் இலங்கை வரலாறும் சொல்லப்படுகின்றன. லண்டன் பீ.ஏ. பட்டதாரியான நூலாசிரியர் த.இராமநாதபிள்ளை, புலோலி இந்துக் கல்லூரி அதிபராகப் பணியாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2775).

ஏனைய பதிவுகள்