12974 – போரின் படிப்பினைகள்-3: நம்பிக்கையின் மலர்ச்சி.

ஜோன் றிச்சார்ட்சன் (ஆங்கில மூலம்), க.சண்முகலிங்கம் (தமிழாக்கம்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12, சுலைமான் டெர்ரஸ், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (நுகேகொட: பிக்பேர்ட் பிரின்டர்ஸ், 119, சுபத்திராம வீதி, கங்கொடவில).

xiv, 152 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 200., அளவு: 22 x 15 சமீ.

ஜோன் றிச்சார்ட்சன் ஆங்கிலத்தில் எழுதிய ‘நஞ்சூட்டப்பட்ட சுவர்க்கம்’ (Pயசயனளைந Pழளைழநென) என்ற நூலின் தமிழ்ஃசிங்கள மொழிபெயர்ப்புகள் எட்டுப் பாகங்களாக வெளியிடத் திட்டமிடப்பட்டது. அவ்வகையில் ‘போரின் படிப்பினைகள்’ என்ற தலைப்பில் ஏககாலத்தில் சிங்கள, தமிழ் மொழிகளில் வெளியிடப்பட்ட அந் நூலின் மூன்றாவது பாகம் இது. முதலாவது பாகம் இலங்கை உள்நாட்டுப் போரின் செலவுகளும் தாக்கங்களும் பொருளாதார இழப்புகளும் (2008) என்ற தலைப்பிலும், இரண்டாம் பாகம் நெருக்கடியின் பாதை (2011) என்ற தலைப்பிலும் வெளியிடப்பட்ட நிலையில் இம்மூன்றாம் பாகம் மூலநூலின் 6ம்,7ம்,8ம் அத்தியாயங்களின் மொழிபெயர்ப்பாக அமைந்துள்ளது. இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலம், பண்டாரநாயக்க யுகத்தின் தொடக்கம், புதிய யுகத்தின் அரசியல் ஆகிய மூன்று பிரதான இயல்கள் அடங்குகின்றன. ஜோன் றிச்சார்ட்சன் அமெரிக்க பல்கலைக்கழகங்களின் சர்வதேச சேவைகளுக்கான பள்ளியில் சர்வதேச அபிவிருத்தி பேராசிரியராகவும் அதே பல்கலைக்கழகத்தின் கற்பித்தலுக்கான சிறப்பு மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றுகின்றார். இலங்கையிலுள்ள கொழும்புப் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவிலுள்ள மசசூசட்ஸ் தொழில்நுட்பத்திற்கான நிறுவனம் ஆகியவற்றின் வருகை தரு புலமையாளராகவும் இருந்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60881).

ஏனைய பதிவுகள்

7bit Casino

Content Nuts Io Gambling establishment: Good for step one Deposits No deposit Bonus Casinos In numerous Says Are not any Deposit Bonuses Free? Admirers of