12990 – காரை தீபம்: வெள்ளிவிழா மலர் 2015.

பரமநாதர் தவராஜா, சிவசம்பு சிவராஜா, ப.ஐங்கரன், ந.திவாகரன் (தொகுப்பாசிரியர்கள்). லண்டன்: பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (லண்டன்: எய்ம்ஸ் மீடியா சேர்விஸ், ஹரோ).

216 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5 x 21 சமீ., ISBN: 978-1-943844-94-4. 954.93

பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம், தனது 25ஆவது ஆண்டு விழாவை 03.10.2015 அன்று லண்டன் பெக் தியேட்டரில் வெள்ளிவிழாவாகக் கொண்டாடியபோது, வெளியிடப்பட்ட மலர். இதில் ஆசிச் செய்திகள், நிறுவன அறிக்கைகள், வண்ணப் புகைப்படத் தகடுகள், தாயகத்தில் நிறைவேற்றிய வேலைத் திட்டங்கள் எனப் பல்வேறு தகவல்கள் நிறைவாக இடம்பெற்றுள்ளன. காரைநகர் பற்றிய பிரதேச வரலாற்றுக் குறிப்புகளும் ஆங்காங்கே கட்டுரைகளாகக் காணப்படுகின்றன. காரைநகரும் விளையாட்டும், காரை மக்களும் பாரம்பரியங் களும், காரைநகரில் பிரசித்தியான கோவில்கள், காரை நீர்த்தேக்கங்கள் எனப் பல்வேறு தகவல்களை இம்மலரில் பெறக்கூடியதாகவுள்ளது.

ஏனைய பதிவுகள்

12889 – கோமாதா கருத்துக் களஞ்சியம்.

சு.செல்லத்துரை. இளவாலை: அன்னை சுப்பிரமணியம் பத்தினிப்பிள்ளை நினைவு வெளியீடு, புனித வாசம், பத்தாவத்தை, 2வது பதிப்பு, மார்ச் 2001, 1வது பதிப்பு, ஏப்ரல் 1994. (சங்கானை: சாய்ராம் புத்தக நிலையம்). 35 பக்கம், தகடுகள்,

12932 – சைவ வித்தியரத்தினம் பேராசிரியர் இரா.வை.கனகரத்தினம் அவர்களி ன் நீள நினைதல் மலர்.

முருகேசு கௌரிகாந்தன், கோணலிங்கம் உதயகுமார் (மலராசிரியர்கள்). வவுனியா: கோணலிங்கம் சரஸ்வதி நிலையம், கனகராயன்குளம், 1வது பதிப்பு. 2016. (யாழ்ப்பாணம்: கணபதி பிரின்டர், 54/2, தலங்காவல் பிள்ளையார் கோவிலடி, திருநெல்வேலி). xxxii, 212 பக்கம், விலை:

14036 நீதி நூல் தொகுப்பு.

சி.கந்தசாமி (தொகுப்பாசிரியர்). கொழும்பு 13: விவேகானந்தசபை, 34, விவேகானந்த மேடு, 1வது பதிப்பு, ஜுன் 1976. (நாவலப்பிட்டி: ஸ்ரீ ஆத்மஜோதி அச்சகம்). (6), 138 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18×12 சமீ.

12991 – அடங்காப்பற்று வன்னியில் ஆதிகாலத் தமிழர் வரலாறு: நாகர்காலத்துப் புராதன தொல்பொருட் சின்னங்கள்.

அருணா செல்லத்துரை. வவுனியா: அருணா வெளியீட்டகம், எண் 68, வைரவர் கோவில் வீதி, வைரவர் புளியங்குளம், 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xxiv, 151

14755 கடலின் நடுவில்.

கே.எம்.எம்.இக்பால். கிண்ணியா 4: கலாநிதி கே.எம்.எம்.இக்பால், கட்டையாறு, 1வது பதிப்பு, டிசம்பர் 2008. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). (4), 60 பக்கம், விலை: ரூபா 150.,

12902 – சபாரத்தினமெனும் திருவாசகப் பேரூற்று.

ஆழ்கடலான் (இயற்பெயர்: முருக வே.பரமநாதன்). தெகிவளை: திரு.த.துரைராசா, ‘திருவாசகம்’, 11/6, றூபன் பீரிஸ் மாவத்தை, களுபோவில, 1வது பதிப்பு, டிசம்பர் 1998. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). (6), 116