பரமநாதர் தவராஜா, சிவசம்பு சிவராஜா, ப.ஐங்கரன், ந.திவாகரன் (தொகுப்பாசிரியர்கள்). லண்டன்: பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (லண்டன்: எய்ம்ஸ் மீடியா சேர்விஸ், ஹரோ).
216 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5 x 21 சமீ., ISBN: 978-1-943844-94-4. 954.93
பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம், தனது 25ஆவது ஆண்டு விழாவை 03.10.2015 அன்று லண்டன் பெக் தியேட்டரில் வெள்ளிவிழாவாகக் கொண்டாடியபோது, வெளியிடப்பட்ட மலர். இதில் ஆசிச் செய்திகள், நிறுவன அறிக்கைகள், வண்ணப் புகைப்படத் தகடுகள், தாயகத்தில் நிறைவேற்றிய வேலைத் திட்டங்கள் எனப் பல்வேறு தகவல்கள் நிறைவாக இடம்பெற்றுள்ளன. காரைநகர் பற்றிய பிரதேச வரலாற்றுக் குறிப்புகளும் ஆங்காங்கே கட்டுரைகளாகக் காணப்படுகின்றன. காரைநகரும் விளையாட்டும், காரை மக்களும் பாரம்பரியங் களும், காரைநகரில் பிரசித்தியான கோவில்கள், காரை நீர்த்தேக்கங்கள் எனப் பல்வேறு தகவல்களை இம்மலரில் பெறக்கூடியதாகவுள்ளது.