திமிலைத் துமிலன் (இயற்பெயர்: சின்னையா கிருஷ்ணபிள்ளை). மட்டக்களப்பு: கவிமணி வெளியீட்டுக் குழு, முத்தமிழ் மன்றம், ஆசிரியர் கலாசாலை, 1வது பதிப்பு, மாசி 1986. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்).
(12), 88 பக்கம், விலை: ரூபா 20.00, அளவு: 21×14 சமீ.
திமிலைத்துமிலன் எழுதிய 51 குழந்தைப் பாடல்களும், 7 கதைப் பாடல்களுமாக மொத்தம் 58 சிறுவர் பாடல்களைக் கொண்ட நூல் இது. எங்கள் வீடு, ஆட்டுக்குட்டி ஓடுதே, சந்தை நல்ல சந்தை, பனம்பழம், பட்டணம், பனித்துளி, தவளை கூத்து, வண்டு, கப்பல் போகுது, ஓயாத விளையாட்டுக்காரி என இன்னோரன்ன 51 சிறுவர் பாடல்களும், செருக்குற்ற ஈசல்கள், நத்தை பெற்ற முத்து, ஆலாவும் நரியும், தந்தி ஒன்று வந்தது, ஓடும் ரயிலில் ஒரு கிழவன், ஒரு திருடன் உண்மை பேசுகிறான், பகைவனுக்கருள்வாய் ஆகிய ஏழு கதைப்பாடல்களும் இதில் அடங்குகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 9528).