13886 நாவலர் நோக்கும் வாக்கும்.

சி.தில்லைநாதன். கொழும்பு 4: நாவலர் நற்பணி மன்றம், இல 36, நந்தன கார்டின், இணை வெளியீடு, கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

60 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-543-7.

ஆறுமுக நாவலர், நாவலர் நோக்கும் வாக்கும், சீர்திருத்தவாதி நாவலர், நாவலரும் தேசியப் பார்வையும், நாவலர் அடிச்சுவட்டில் இலக்கியம், நாவலரும் தமிழகமும், விளக்கமுறும் நாவலர் சரித்திரம் ஆகிய ஏழு கட்டுரைகளின் வாயிலாக நாவலர் பெருமானின் பணிகளை சான்றாதாரங்களோடும், நாவலர் போற்றிய நேர்மையோடும் நூலாசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார். இவை நாவலரின் பலத்தை எடுத்துக்காட்டுகின்ற அதே வேளை, அவரது பலவீனங்களையும் உணர்த்தத் தவறவில்லை. ஆனால் நாவலர் மேற் குற்றம் சுமத்தித் தம்மைப் பரிசுத்தராகக் காட்ட முயலும் தன்முனைப்பு மிக்க ஆராய்ச்சியாளர்கள் போலன்றி, நாவலர் வாழ்ந்த காலத்தின் பகைப்புலத்தில் வைத்தே அவற்றின் பலங்களும் பலவீனங்களும் ஆசிரியரால் நோக்கப்படுகின்றன. நாவலரின் எழுத்துக்களினூடும் பணிகளினூடும் பொது நோக்கு, மனிதாபிமானம், நீதி முதலான நற்பண்புகள் ஊடுருவி விரவி நிற்பது போலவே,  நாவலர் பற்றிய இக்கட்டுரைகளிலும் அவை வியாபித்துள்ளன. ஆசிரியரின் சுயாதீனமான சிந்தனைத்திறன், பிறர் கண்ணுக்குப் புலப்படாதிருந்த நாவலர் பற்றிய புதிய காட்சிகளைக் காட்டியுள்ளன. பேராசிரியர் சி.தில்லைநாதன், இலங்கையில் ஓய்வுநிலையில் மூத்த தமிழ்ப் பேராசிரியராவார்.

ஏனைய பதிவுகள்

Merkur24 Spielsaal

Content Herr Bet Casino kein Einzahlungsbonus – Erhalten Diese Durch Uns Ohne ausnahme Die Aktuellen Kunde Und Neuen Boni Exklusive Einzahlung American Roulette Gratis Spielen

Goldrausch gebührenfrei online spielen

Content Casino safari heat | Unser Besten Matching Spiele Magic and Wizards Match Eintunken Sie tief within diese Welt ein Edelsteingewinnung ihr, solange Die leser