விசாகரத்தின ஐயர் தெய்வேந்திர ஐயர் (மலராசிரியர்). தொண்டைமானாறு: ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம், 2வது பதிப்பு, 2000, 1வது பதிப்பு, 2000. (கரவெட்டி: லெட்சுமி ஓப்செட் அச்சகம், நாவலர்மடம்). ii, 56 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ. துதிகள் (திருமுறைத் தொகுப்பு), செல்வச்சந்நிதி ஆலய வரலாறு, வழிபாடுகளும் உற்சவங்களும், திருப்பள்ளியெழுச்சி, திருஊஞ்சல், செல்வச்சந்நிதி அகவல், திருச்சந்நிதிப் பதிகம் (ஆ.வேதநாயகம்), திருத்தல புராணம் (சீ.வினாசித்தம்பி), ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகப்பெருமான் அந்தாதி (சந்தனா நல்லலிங்கம்), எதிர்பாரா இன்னல் -கட்டுரை, கே.கே.கிருஷ்ணபிள்ளை அவர்களின் செல்வச்சந்நிதி கீர்த்தனா மாலையில் இடம்பெற்ற பாடல்கள் (சந்நிதிக் கந்தனை, செல்வச் சந்நிதியானை, வரந்தருவாய் முருகா), பூக்காரர் (ந.இந்திரகுமார்), கலியுக வரதன்- சந்நிதி முருகன் (க.சிவக்கொழுந்து), ஸ்ரீ செல்வச் சந்நிதிக் கந்தப் பெருமான் (செ.யோகச்சந்திரன்), நீதிபதி அவர்களின் கருத்துரை (ந.யோகசிகாமணி), பிரதேசச் செயலாளரின் பாராட்டுரை (ஆ.சிவசுவாமி), தொடரும் பணிகள் (ஆலயத்தினர்) விசேட நன்றிகள் (ஆலய உரிமையாளர்கள்), வேலழகர் பாமாலை (சிவ.ஆறுமுகம்) ஆகிய ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50800).