ஐ.பயஸ் றெஸ்ஸாக் (மலராசிரியர்). கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்டப் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2001. (கொழும்பு 6: பரணன் அசோஷியேட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 403, 1/1 காலி வீதி). (26), 134 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26.5×19.5 சமீ. இலங்கைச் சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 2000ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலரின் 36ஆவது இதழ் (10-02-2001) பல்வேறு தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. ஆசிச் செய்திகள், வருடாந்த அறிக்கைகளுடன், சட்ட ஆட்சியும் ஜனநாயக விழுமியமும் (எஸ்.சர்வானந்தா), எமது நாட்டின் நோக்கில் (கே.கனக ஈஸ்வரன்), வாடகைச் சட்டம் (எஸ்.குமாரசுவாமி), இலங்கையில் உரித்துப் பதிவுச் சட்டத்தின் அறிமுகம் (கே.அருள்), பராமரிப்புச் சட்டம்: ஒரு மீள்பார்வை (கா.பாக்கியலிங்கம்), பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் அவர்களுடனான கருத்துப் பரிமாறல், ஆட்கொணர்வு மனு: ஒரு நோக்கு (செ.செல்வகுணபாலன்), அவதூறு தொடர்பான பாதுகாப்புக்கள் (கே.ஜீ.ஜோன்), வழக்குரைகளின் திருத்தம் மீது ஒரு கண்ணோட்டம் (எம்.எஸ்.எம். சம்சுதீன்), நின்றிடுவாய் நெஞ்சில் நிலைத்து (இ.ஜெயராஜ்), பிணை தொடர்பான இலங்கைச் சட்டம் (ஏ. எல். அவ்பர்), எழுத்தாணைகள் (ஐ.பயஸ் றெஸ்ஸாக்), சொல்லக்கேட்ட சான்று என்பது என்ன (வீ.கௌசல்யா), தண்டனைச் சட்டக் கோவைக்கான அண்மைக் காலத் திருத்தங்கள் (க.ஜெயநிதி), நம்பிக்கைப் பொறுப்புச் சட்டம் கூறுவது என்ன? (எம்.ஹைதர் ஹசன்), ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் திருத்தமும் (டீ.ஆ.றஸீன்), சட்ட வலிதுடைமையான கைது ஓர் ஆய்வு (ஷஹீனா மொஹம்மட்), அப்பா-சிறுகதை (ஏ.ஜீ.சிறீன்), நானிலம் மகிழச் செய்வோம் (ஆரிகா ஆதம்பாவா), பெண்கள் மீதான தேசவழமைச் சட்டம் (வு.ஜெயரூபன்), The Legal Fight Against Computer Programme Piracy (D.M.Karunaratne), Legal Definition of Defective Goods (I.Nizam Razzaq), An Interview with Mr. Upali A Goonaratne, The Doctrine of Liberty in Islam (H.M.M.Baari) ஆகிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28522).