சதாசிவம் சச்சிதானந்தம் (பதிப்பாசிரியர்). பன்னாட்டு உயர்கல்வி நிறுவனம், Institut International des Etudes Superieures, 70, Rue Philippe de Girard 75018, Paris, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2019. (தமிழ்நாடு: அச்சக விபரம் தரப்படவில்லை). x, 336 பக்கம், விலை: 15 இயூரோ, அளவு: 24×18.5 சமீ., ISBN: 978-29-51012-27-1. நான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு பாரிசில் 28,29 செப்டெம்பர் 2019இல் நடைபெற்றது. இவ்வாய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட தமிழியல் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். ஈழத்துப் பெண் ஆளுமைகள் (சுபதினி ரமேஸ்), பேரா.சிவத்தம்பியின் பன்முக ஆளுமை (ஏ.என்.கிருஷ்ணவேணி), ஈழத்தமிழரின் தமிழ் நூல்களை ஆவணப்படுத்துவதில் நூல்தேட்டத்தின் பங்களிப்பு (என்.செல்வராஜா), ஆறுமுக நாவலர் செய்த பைபிள் மொழிபெயர்ப்பு (சோ. பத்மநாதன்), தமிழகத்தில் தமிழ் வளர்த்த இலங்கைத் தமிழ் அறிஞர்கள் (ரவிசந்திரிகா), 19ஆம் நூற்றாண்டிலே யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகள் பார்வையும் பதிவும் (சின்னத்தம்பி பத்மராஜா), இலங்கைப் புலவர்களின் குழந்தைப் பாடல்கள் (ராஜினி வைத்தீஸ்வரன்), குறிஞ்சித் தமிழனும் தமிழ் மொழியும் (கலா சந்திரமோகன்), சிங்கள அறிஞர்களின் தமிழ்த் தொண்டு: பேராசிரியர் W.S.கருணாதிலக அவர்களின் தமிழ்ப்பணி குறித்த ஓர் ஆய்வு (விஜிதா திவாகரன்), தமிழ் வளர்ச்சிப் பணியில் சிங்களவர் (விநோதினி அறிவழகன்), தமிழ்மொழியும் இலங்கைவாழ் சிங்களவர்களும்-ஒரு சமூகவியல் பார்வை (மல்லிகாதேவி நாராயணன்), இஸ்லாமியத் தமிழ்க் கவிதை இலக்கியத்திற்கு இலங்கை இஸ்லாமியர்களின் பங்களிப்பு (ஜின்னாஹ் ஷரிபுத்தீன்), புகழ் அருள்வாக்கி: ஆ.பி.அப்துல் காதிர் புலவரின் வாழ்வும் தமிழ் இலக்கிய முயற்சிகளும் M.N.F.ருஸ்னா), இசுவா அம்மானை போதிக்கும் கற்பொழுக்கமும் இறைநேசிப்பும் (சின்னத்தம்பி சந்திரசேகரம்), தவத்திரு டாக்டர் சேவியர் தனிநாயகம் அடிகள் (மைதிலி), மலையகச் சமூகப் பின்புலத்தில் கோ.நடேசையரின் வகிபாகம் (பெருமாள் சரவணகுமார்), இலங்கைத் தமிழ் நாடகத் துறையில் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் வகிபாகம் (S.R.தேவகுமாரி), ஈழத்துத் தமிழ் நாடகச் செல்நெறியில் வித்தியானந்தனின் பங்களிப்பு (பாஸ்கரன் சுமன்), ஈழத்து கலை இலக்கியச் செல்நெறியில் பேராசிரியர் கைலாசபதியின் வகிபாகம் (வ.மகேஸ்வரன்), ஈழத்தில் தமிழ் இலக்கண முயற்சிகள் (ரூபி வலன்றினா), அரங்கியலில் பேரா. சிவத்தம்பியின் வகிபாகம் (க.திலகநாதன்), தமிழ் வளர்ச்சியில் மலையக எழுத்தாளர் மு.சிவலிங்கத்தின் பங்களிப்பு (ச.டிசிதேவி), புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை (சோதிமலர் இரவீந்திரன் தேவர்), தமிழர் வரலாறு யாத்த சபாபதி நாவலர் (துரை. மனோகரன்), ஸி.வி.வேலுப்பிள்ளை 1914-1984 (M.M.ஜெயசீலன்), வித்துவான் வேந்தனாரின் ஆக்கங்கள்-சில குறிப்புகள் (கலையரசி சின்னையா), ஈழமும் தமிழும் (தலிஞான் முருகையா), புலம்பெயர் சிறுகதைகளில் தமிழரின் பண்பாட்டு அடையாளம் -மாறுதலும் மறைதலும் (கோ.குகன்), புலம்பெயர் நாடுகளில் இலங்கையர் ஆற்றும் தமிழ்ப்பணி-கனடாவை மையப்படுத்திய ஆய்வு (இளையதம்பி பாலசுந்தரம்), புலம்பெயர் இலக்கியம் என்பது ஈழ இலக்கியத்தின் நீட்சியா? (வி.ஜீவகுமாரன்), இலண்டன்வாழ் தமிழ்ச் சிறாரும் தமிழ்மொழியும் (அஜந்தன் ஜெயக்குமார்), கனடியத் தமிழ் ஊடகங்களில் கிழக்கிலங்கைத் தமிழர்களின் பங்களிப்பு (எஸ்.ஸ்ரீதரகுமார்), தமிழ்மொழியும் டென்மார்க் தமிழர்களும் (சிவனேஸ்வரி றொபர்ட் கெனடி), தமிழ் கற்பதில் இலண்டன் தமிழ் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் (சாகித்தியா சிவபாலன்), இலங்கை மலையக தற்கால நாவல்களும் சிறுகதைகளும்: இவற்றின் புதிய போக்கும் (இராசையா மகேஸ்வரன்), ஈழத்து ஊடகங்களும் தமிழும் (சண் தவராஜா), வணக்கத்துக்குரிய ஹிஸ்ஸெல்லே தம்மரத்தின தேரரின் தமிழ்ப் பணிகள் (தம்மிக்க ஜயசிங்க), இலங்கை வரலாற்றில் தமிழர் வரலாறும் மறைக்கப்பட்ட உண்மைகளும் மதப்பின்னணியும் (வெற்றிவேல் சிவகுமார்), கையகராதிப் பதிப்பு வேறுபாடுகள் (விருபா குமரேசன்) ஆகிய தமிழ் ஆக்கங்களும் நான்கு ஆங்கில ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன.
Set of 100percent Deposit Bonus Also provides For United kingdom Participants Inside June 2024
Posts Finest Internet casino Bonusesall A knowledgeable Earliest Deposit Bonus Casinos Inside One Destination to Get Very best First Deposit Incentives! As to why Receive