14435 உரைநடைக்கோவை: ஆறுமுக நாவலர் தொடக்கம் சிவராமன் வரை.

சு.வேலுப்பிள்ளை (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 2வது பதிப்பு, புரட்டாதி 1998, 1வது பதிப்பு, புரட்டாதி 1996. (கொழும்பு 12: ஸ்ரீ லங்கா வெளியீடு, F.L. 1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). (5), 155 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14 சமீ. 1995 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதும் 1997ஆம் ஆண்டு முதல் நடைபெறும் தேர்வுகளுக்குரியதுமான க.பொ.த. உயர்தர வகுப்புக்குரிய புதிய பாடத்திட்டத்தில் “தமிழ்” பாடத்தின் பொருட்பரப்பின் ஒரு கூறாக, உரைநடைப் பகுதியும் இடம்பெறுகின்றது. இவ்வுரைப் பகுதியில் 19ஆம் நூற்றாண்டு தொடக்கம் இக்காலப் பகுதி வரை உரைநடையில் நிகழ்ந்த மாற்றங்களைப் புலப்படுத்துவதாய் அமைந்த 15 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. திருத்தொண்டர் பெரியபுராண வசனம்-முகவுரை (ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்), தமிழ்ப் பாஷைக்குள்ள குறைபாடுகள் (சுப்பிரமணிய பாரதியார்), தமிழர் கொள்கை (மறைமலை அடிகள்), மகாகவி பாரதியார்-10ஆம் பகுதி (வ.ராமசாமி), திரு வி.க. வின் வாழ்க்கைக் குறிப்புகள்-கல்வி (வி.கலியாணசுந்தர முதலியார்), இலக்கியச் சுவை (விபுலானந்த அடிகளார்), என் சரித்திரம்-ஆசிரியரை அடைந்தது (உ.வே.சாமிநாதையர்), தமிழும் பிற மொழியும் (க.கணபதிப்பிள்ளை), பண்பாடு (ராஜாஜி), சமதர்மம்- மேடைப்பேச்சு- ஓய்வுநேரம் (சி.என்.அண்ணாதுரை), தம்பிக்கு-கடிதங்கள்: முதலாவது கடிதம் (மு.வரதராசன்), பாட்டும் ஓசையும் (வி.செல்வநாயகம்), பகிரதப் பிரயத்தனம் (சி.கணபதிப்பிள்ளை), கலையும் காட்சியும் (ஏ.எம்.ஏ.அஸீஸ்), பிணைக்கப்பட்ட கடனை விட வெளிமுதலீட்டை வரவேற்பதே நலம் (ஏ.என்.சிவராமன்) ஆகிய மாதிரிக் கட்டுரைகள் தேர்ந்து தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35958).

ஏனைய பதிவுகள்

14263 பால்நிலை சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்.

ஜோ.கருணேந்திரா, து.கௌரீஸ்வரன், சு.நிர்மலவாசன், சி.ஜெயசங்கர், கமலாவாசுகி (தொகுப்பாசிரியர் குழு). மட்டக்களப்பு: மூன்றாவது கண், உள்ளூர் அறிவுத்திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழு, இல.30, பழைய வாடிவீட்டு வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2014. (அச்சக விபரம்