ஆசி.கந்தராஜா. நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஜுலை 2018. (சென்னை 600077: மணி ஓப்செட்). 128 பக்கம், விலை: இந்திய ரூபா 145.00, அளவு: 21×14 சமீ., ISBN: 978-93-86820- 49-5. பல்வேறு நாடுகளின் பண்பாட்டுப் பின்புலத்தில் எழுதப்பட்டிருக்கும் பதின்மூன்று சிறுகதைகள் அடங்கியது இத்தொகுப்பு. அறிவும் அனுபவமும் ஒன்றையொன்று நிறைவு செய்யும் விதமாகப் புனையப்பட்டிருக்கும் இக்கதைகளில் எழுத்தாளனுக்குரிய நுண்ணுணர்வோடு ஓர் அறிவியலாளனுக்குரிய கூர்நோக்கும் ஒருங்கே வெளிப்படுவதைக் காணலாம். இக்கதைகளினூடே மிக மெலிதாகத் தொனிக்கும் அங்கதம் மேலெழுந்தவாரியான நமது நாகரிக நடத்தைகளைப் பரிகசிக்கும் அதேவேளையில், உள்ளார்ந்த மனநெகிழ்வையும் மனிதாபி மானத்தையும் வலியுறுத்துவதாகவும் அமைந்திருக்கிறது. இந்நூலில் ஆசிரியரினால் பத்தோடு பதினொன்று, ஒட்டு மரங்கள், வெள்ளிக்கிழமை விரதம், காதல் ஒருவன், புகலிடம், எதிலீன் என்னும் ஹோமோன் வாயு, மிருகம், யாவரும் கேளிர், அன்னை, கள்ளக்கணக்கு, அந்நியமாதல், சூக்குமம், வேதி விளையாட்டு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. 829ஆவது காலச்சுவடு வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது.