14790 பூலான் தேவி.

மொழிவாணன். கொழும்பு 13: நீரஜா பப்ளிக்கேஷன்ஸ், 104/36, சங்கமித்த மாவத்தை, 1வது பதிப்பு, ஜுன் 1990. (கொழும்பு 13: பெர்ணான்டோ பிரின்டர்ஸ்). (8), 90 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 29.90, அளவு: 17.5×12.5 சமீ. இது ஜனரஞ்சக எழுத்தாளர் மொழிவாணனின் பத்தாவது நாவல். ஒரு பெண் பயங்கரவாதியின் உண்மைக்கதை என்ற விளம்பரத்துடன் வெளிவந்துள்ளது. இந்தியாவின் மத்திய பிரதேசத்துப் பொலிஸ் தலைமைக் காரியாலயத்தின் பதிவேடுகளில் உள்ள குறிப்புகளின்படி பூலான்தேவி 5.10.1948இல் நாஜிபாபர் கோட்டையில் பிறந்துள்ளதாகவும், சுமார் 800 கொலைகளையும், 789 கொள்ளைகளையும் மேற்கொண்டதாவும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். பூலான்தேவியின் வாழ்க்கை வரலாற்றை கற்பனை கலந்து விறுவிறுப்பானதொரு மர்ம நாவலாக தினகரன் வாரமஞ்சரியில் முன்னர் தொடராக வெளியிட்டிருந்தார். அதன் நூல்வடிவம் நீரஜா பப்ளிக்கேஷன்ஸ் வெளியீட்டுத் தொடர் இலக்கம் 7 ஆக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17370).

ஏனைய பதிவுகள்