செ.கணேசலிங்கன். சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 12/3, மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7வது தெரு, வடபழநி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2014. (சென்னை: சிவம்ஸ்). 160 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 18×12 சமீ. அம்பிகா சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறாள். அக்காவின் திருமண வாழ்வைப் பார்த்தும் கேட்டும் குடும்ப வாழ்வில் தான் நுழைவதை வெறுக்கிறாள். அக்காவின் அறிவுரையின்படி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் அலெக்சிடம் உதவி வேண்டுகிறாள். போராளிப் பெண்ணாக பயிற்சிக்கு வந்த சந்திரா பயிற்சி முடியும் வேளை தனித்துப் போகிறாள். தேனியில் ஆசிரியர் தொழிலுடன் விவசாயத்திலும் ஈடுபட்டிருந்த முருகேசன் சந்திராவுக்கு உதவ முன்வருகின்றான். அவன் அலெக்சின் ஆசிரியப் பயிற்சிக்கால நண்பன். சந்திராவின் திடீர் மரணத்தின் பின்னர் அம்பிகா அவளது தனித்துவ வாழ்வுநிலையை அறிய ஆவல் கொள்கிறாள். அலெக்ஸ் உதவுகின்றான். குடும்ப வாழ்க்கை, கர்ப்பம், மகப்பேற்றுத் துன்பம் இயற்கையின் ஓரவஞ்சமா? ஆணாதிக்கம் அமைத்த குடும்ப அமைப்பின் குரூரமா? என்று குழம்புகின்றாள். இவர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட கதையாக மகளிர் இருவர் அமைந்துள்ளது.
14119 கற்பக தீபம்-2014: ஸ்ரீ கற்பக விநாயகர்ஆலய புனராவர்த்தன பிரதிஷடா மகா கும்பாபிஷேக மலர்.
மலர்க் குழு. லண்டன் E17 4SA: ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம், 2-4,Bedford Roard,Walthamstow, 1வது பதிப்பு, ஜுலை 2014. (லண்டன் E17 4SA: JR Print,59-61,Hoe Street). 120 பக்கம், புகைப்படங்கள், விலை: