14832 இலக்கியம்: விசேட மலர் 2014.

சபா ஜெயராசா, எஸ்.ஜே.யோகராஜா, க.இரகுபரன் (தொகுப்பாசிரியர்கள்), சு.முரளிதரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு: அரச இலக்கிய ஆலோசனைக் குழு, கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், 1வது பதிப்பு, 2014. (கொழும்பு: Fast Ad அச்சம்). 224 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. இவ்விதழில் மலையக வாழ்வு-ஆங்கில மலையாள மொழிகளில் (சாரல்நாடன்), சுதந்திரத்தின் பின் இலங்கையில் நிகழ்ந்த இலக்கியக் கோட்பாடுகள் நிலைப்பட்ட கருத்தாடல்கள் (சபா.ஜெயராசா), புனைகதைகளிற் பேச்சு வழக்கு (க.இரகுபரன்), இலக்கியக் கோட்பாடுகளும் இலக்கிய விமர்சனக் கோட்பாடுகளும் (நதிரா மரியசந்தனம்), யாழ்ப்பாணத்தில் சாதியும் மதமும் ஈழத்துத் தமிழ் நாவல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேடல் (ம.இரகுநாதன்), இலங்கையில் வாய்மொழிப் பாடல் மரபில் வழங்கிவரும் எண்ணெய்ச்சிந்து: ஒரு பன்முக நோக்கு (செ.யோகராசா), யாழ் மாவட்டத்தின் சிறுகதை இலக்கியப் போக்குகள் (வ.மகேஸ்வரன்), தமிழ் மொழியில் “அ” எழுத்துக்குள்ள மாற்றொலிகளின் முக்கியத்துவம் (எஸ்.ஜே.யோகராஜா), எழுத்து-சிந்தனை-இலக்கியம் (கனகசபாபதி நாகேஸ்வரன்), சாதியம் நாத்திகம் நவ-பிராமணியம் (ந.இரவீந்திரன்), கைகேயி சூழ்வினைப் படலத்தின் ஊடாக வெளிப்படும் கம்பனின் கவித்துவம் (ச.லலீசன்), புதிய நூற்றாண்டில் ஈழத்து வடபுலத் தமிழ்க் கவிதைகள் (தி.செல்வமனோகரன்), ஈழத்து இலக்கிய மொழிபெயர்ப்புக்கள் (கந்தையா ஸ்ரீகணேசன்), மலையகம் தந்த ஓராளுமை-சாரல்நாடன் குறித்த ஒரு நேச பதிவு (சு.முரளிதரன்), ஈழத்து இனப்பிரச்சினையும் தமிழில் மொழிபெயர்ப்புக் கவிதைகளும் (மார்க்கண்டன் ரூபவதனன்), தமிழ்ப் பதிப்புலகில் சி.வை.தா. (ஸ்ரீ.பிரசாந்தன்), பேராசிரியர் கைலாசபதியை முன்னிறுத்தி முற்போக்கு இலக்கியம் பற்றிய ஒரு மதிப்பீடு (லெனின் மதிவானம்), உழைக்கும் மக்களை அடையாளப்படுத்துகின்ற மலையக இலக்கியம் (தெளிவத்தை ஜோசப்), ஈழத்துத் தமிழ் இலக்கியச் செல்நெறியும் தென்னிலங்கை கவிதையும் (மேமன் கவி) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Free Online Slots

Content How Do I Pick A Good Slot Machine? | online slots gratis Plikt Mig Registrera En Konto För Att Prova Fria Slots? Vanliga Frågor

300percent Local casino Incentives

Posts Deposit Added bonus: Positives and negatives – online casino best offers The reason why you Ought not to Miss out on 300percent Local casino