அருளினியன். சென்னை: Stoicdale Publishers, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (சென்னை 600042: ஜீவா பதிப்பகம், வேளாச்சேரி). 162 பக்கம், விலை: ரூபா 450., இந்திய ரூபா 230., அளவு: 22×14.5 சமீ. யாழ்ப்பாணம், குப்பிழானைப் பிறப்பிடமாகக் கொண்ட அருளினியன் தன் ஆரம்பக் கல்வியை யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும், உயர் கல்வியை பெங்களூர் பல்கலைக் கழகத்திலும் பெற்றவர். “ஆனந்த விகடன்” மாணவப் பத்திரிகையாளராக முதலில் அறிமுகமான இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் “சினிமா எக்ஸ்பிரஸ்”, “தினமணி” ஆகியவற்றின் உதவி ஆசிரியராகவும், நிருபராகவும் பணியாற்றியவர். தற்போது சுயாதீன பத்திரிகையாளராகவும், பயணத்துறை ஊடகவியலாளராகவும், தமிழ் சினிமாவில் திரைக்கதைகளிலும் பங்களித்திருக்கிறார். கேரளத்தின் அறியாத பக்கங்களோடு அழைத்து செல்கிறார் அருளினியன். பயணக்கட்டுரைகளின் புதிய வரைவிலக்கணம் இந்த கேரள டயரீஸ். இந்நூலில் இவர் எழுதிய தளிப்பறம்பு நம்பூதிரியும் பின்னெ ஞானும், மணிப்பிரவாளமும் இலங்கைத் தமிழும், ஈழவர் என்ற ஈழத்தவர், முருகனைத் தொலைத்த கதை, காவுகள் என்ற கோயில்காடுகள், வேர் தேடி, வெள்ளாளர்கள் யாழ்ப்பாணத்தின் துயரம், நாவலரும் சைவ வெள்ளாள மேலாதிக்கமும், வீரத்தை இழந்த கதை, தேசவழமை என்ற வெள்ளாளச் சட்டம், பணியாக்களும் குறிச்சியர்களும், கொட்டியூர் மர்மங்கள், கண்ணகித் தெய்வமும் கண்டிப் பெரஹராவும், களரி, கதகளியும் மத ஒருமைப்பாடும், பாலாறும் பாவலி ஆறும், முத்தப்பனும் தெய்யமும் கள்ளும் கருவாடும், தட்சனின் தாடி, மாட்டிறைச்சி அரசியல், மிருகபலி ஆரியர், திலீப் ஏட்டனும் டிங்கொயிஸ்டுகளும், Buddy Love ஆகிய 22 பலவினக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
Action Casino Review
Content Online Casino | go Player Struggles To Withdraw His Winnings Player Is Struggling With Poor Customer Service And Withdrawal Request Security and Responsible Gaming