14949இரவீந்திரநாத் தாகூர்.

நவாலியூர் சோ.நடராசன். கொழும்பு 7: தேசீய நூற்குழு, 135, தர்மபால மாவத்தை, 1வது பதிப்பு, 1967. (நுகேகொட: தீபானீ அச்சகம், ஹை லெவல் ரோட், கங்கொடவில). 351 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ. இரவீந்திரநாத் தாகூர் (07.05.1861- 07.08.1941) புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞராவார். கல்கத்தாவைச் சேர்ந்த வங்காளப் பிராமணரான இவர் ஜெஸ்சூர் மாவட்டம் ஜமீந்தார் மரபைச் சேர்ந்தவர். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இவரே வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தவர். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே. ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும். தாகூரின் படைப்புகள் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. சில நேரங்களில் இவர் வங்காளக் கவி எனவும் அறியப்படுகிறார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய 928 இலக்கிய அறிஞர்கள், புலவர்கள் 546 நூல் தேட்டம் – தொகுதி 15 கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. தாகூர் தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். பதினாறாவது வயதில் இவரது முதலாவது கவிதைத் தொகுதியை பானுசிங்கோ (சூரிய சிங்கம்) என்னும் புனைபெயரில் வெளியிட்டார். தாகூர் பிரித்தானிய அரசை எதிர்த்து இந்திய நாட்டின் விடுதலையை ஆதரித்தார். இவர் தனது போர்க்குணத்தை, போராட்டத்தை ஓவியங்களின் மூலமாகவும், கேலிச் சித்திரங்களின் மூலமாகவும், எழுத்துகள் மற்றும் இரண்டாயிரம் பாடல்களின் மூலமாகவும் வெளிப்படுத்தினார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19661).

ஏனைய பதிவுகள்