14956 பன்மொழிப் புலவரின் ஆய்வுகள். நினைவு மலர்க் குழு.

யாழ்ப்பாணம்: பன்மொழிப்புலவர் தம்பு கனகரத்தினம் நினைவுக் குழு, மயிலங்கூடலூர், 1வது பதிப்பு, மார்ச் 2013. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், இல. 14, கொழும்புத் தமிழ்ச் சங்க ஒழுங்கை, வெள்ளவத்தை). (6), 101 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ. மயிலங்கூடலூர் பன்மொழிப் புலவர் அமரர் தம்பு கனகரத்தினம் (09.04.1927- 18.02.2013) அவர்களின் நினைவு மலர். பேராசிரியர் சபா.ஜெயராசாவின் அணிந்துரையுடன் கூடிய இம்மலரில் பன்மொழிப் புலவரின் வாழ்க்கை வரலாறு (சி.அப்புத்துரை), புத்த மதத்தில் இந்து தத்துவங்கள் (த.கனகரத்தினம்), வீர சோழியத்தின் சார்புநூல் தானா சிங்கள இலக்கண நூலான ‘சிதத்சங்கராவ”? (த.கனகரத்தினம்), சிலப்பதிகாரமும் ஈழமும் (த.கனகரத்தினம்), தமிழ் சிங்கள தூது காவியங்கள் (த.கனகரத்தினம்), பன்மொழிப் புலவர் பற்றிய பல்துறை அறிஞர்கள் பார்வை ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53554).

ஏனைய பதிவுகள்