14960 முருகையன் எனும் முடியா நெடும்பகல்: கவிஞர் இ.முருகையன் நினைவு மலர்.

மலர்க் குழு. கொழும்பு 11: தேசியகலை இலக்கியப் பேரவை, இல.44, மூன்றாம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கட்டடத் தொகுதி, 1வது பதிப்பு, ஜுலை 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை). 60 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ. ‘மூத்த கவிஞர் இ.முருகையன்” என்ற தலைப்பில் தேசிய கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் திரு.சோ.தேவராஜாவின் குறிப்புடன் கவிஞர் முருகையனின் நினைவு மலர் தொடங்குகின்றது. ‘முருகையனின் படைப்புலகும் மொழிச் சிந்தனையும்” என்ற தலைப்பில் திரு.சி.சிவசேகரம் அவரது மொழி ஆற்றல் பற்றி எழுதியிருக்கிறார். கவிஞர் கல்வயல் வே.குமாரசாமியின் ‘முருகையன்” என்ற எண்சீர் விருத்தக் கவிதையும் இரண்டு வெண்பாக்களும் அவரது சிறப்பை இயம்புகின்றன. பேராசிரியர் எஸ்.தில்லைநாதன் தன்னுடய ‘மானிட முன்னேற்றத்தை விழைந்த முருகையன்” என்ற கட்டுரையில் முருகையனின் கைக்கெட்டிய பல்வேறு துறைகள் பற்றி கூறியிருக்கின்றார். ஈழத்தின் கவிதை மூம்மூர்த்திகள் பற்றி ஆரம்பித்து முருகையன் பற்றிய பல்துறை ஆய்வுகள் பற்றிய சுருக்கமான விடயங்களுடன் வீரகேசரியில் வெளிவந்த, பேராசிரியர் எம்.ஏ.நு‡மானின் ‘தன் படைப்புகளால் நிலைத்து வாழும் முருகையன்” என்ற கட்டுரை மறுபிரசுரம் செய்யப்பட்டிருக்கின்றது. சி.கா. செந்தில்வேல், முருகையன் அவர்கள் எப்படி ஒரு பொதுவுடமைவாதியாக இருந்தார் என்ற கருத்துகளை ‘பொதுவுடமை இயக்கத்திற்கு உரமிட்டு நின்றவர்” என்ற தலைப்பில் எழுதியுள்ளார். ‘செம்மைூஎளிமைஸ்ரீ முருகையன்” என்ற தலைப்பில் சோ.பத்மநாதன் எழுதிய அவரின் கவிதைகள் பற்றிய சுருக்கமாக விபரித்திருக்கிறார். ‘இரண்டாயிரம் வருடப் பழைய சுமை எங்களுக்கு” என்ற கவி வரிகளை வைத்து ‘தமிழ் மக்களும், சிங்கள மக்களும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட, கவிஞர் முருகையன் குறிப்பிடும் இரண்டாயிரம் ஆண்டுப் பழைய 928 இலக்கிய அறிஞர்கள், புலவர்கள் 554 நூல் தேட்டம் – தொகுதி 15 சுமையை இறக்கி வைக்க இயலாதவர்களாக தமது வாழ்க்கைப் பயணத்தை இடர் மிகுந்த காட்டு வழியில் துயரங்கள் இழப்புகளுடன் தொடர நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்” என க.தணிகாசலம் குறிப்பிட்டுள்ளார். புதிய பூமியில் சிவா என்பவரால் எழுதப்பட்ட ‘முருகையனின் கவிதையின் உயர்வும் உன்னதமும்” என்ற ஆக்கமும் சுவையாக இருக்கின்றது. இது தவிர தேசிய கலை இலக்கிய பேரவை வவுனியாக் கிளை, இராசையா ஸ்ரீதரன், பயில்நிலம் மாணவர்கள், புதிய மலையகம் மகேந்திரன், எஸ்.டொன் பொஸ்கோ போன்றவர்களின் கண்ணீர் அஞ்சலிகளும், இதயராசன், பூமகன், மு.நாவலன், சிங்காரம் மலர், அழ பகீரதன் போன்றவர்களின் கவிதாஞ்சலிகளும் முருகையன் புகழ் பாடுகின்றன. பின்னிணைப்பாக கவிஞர் முருகையனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கவிதைகளும் கட்டுரைகளும், அத்துடன் இவரின் நூல்களின் பட்டியல்களும் நாடகங்களின் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 46852).

ஏனைய பதிவுகள்