14991 தென்னிலங்கை பிராமிக் கல்வெட்டுகளில் இந்து சமயமும், தமிழும்.

என்.கே.எஸ். திருச்செல்வம். கொழும்பு 5: அருந்ததி பதிப்பகம், 68/14, ஸ்ரீ சித்தார்த்த வீதி, 1வது பதிப்பு, நொவெம்பர் 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). ஒஒ, 212 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 550., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955- 3726-06-3. தமிழ்ப் பிராமி என்பது பண்டைக்காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப் பயன்பட்ட ஒலிப்பியல் எழுத்து முறைமையாகும். இது தெற்காசியாவில் பயன்பாட்டில் இருந்த பிராமி எழுத்துமுறைகளான அசோகப் பிராமி, தென் பிராமி மற்றும் பட்டிபிரோலு எழுத்துமுறைகளிலிருந்து வேறுபட்டது. தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் குகைப் படுக்கைகள், மட்கல ஓடுகள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரை அச்சுக்கள், மோதிரங்கள் ஆகியவற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன. தற்போதைய தென் இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், இலங்கை, எகிப்து, தாய்லாந்து போன்ற இடங்களிலும் தமிழ்ப் பிராமி கண்டுபிடிக்கப்பட்டது. இந்நூலில் இலங்கையின் தென்பகுதிகளில் காணப்படும் பிராமிக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் இந்துசமயம், தமிழ் தொடர்பான தகவல்களைத் தேடித் தொகுத்து வழங்கியுள்ளார். நூலாசிரியர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையில் பட்டம்பெற்றவர்.

ஏனைய பதிவுகள்