15300 கிழக்கிலங்கை வாய்மொழிப் பாடல்களில் பாணர் பாடல் மரபின் செல்வாக்கு.

செ.யோகராசா. கொழும்பு: பேராசிரியர் கைலாசபதி நினைவுக் குழு, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், 1வது பதிப்பு, 2017. (கொழும்பு: சு.ளு.வு. என்டர்பிரைசஸ்).

27 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 18×12  சமீ.

சங்க காலத்தில் வாழ்ந்த பாணர்களது பாடல் மரபின் செல்வாக்கு கிழக்கிலங்கையில் வாழ்கின்ற வாய்மொழிப் புலவர்களது பாடல்களில் கணிசமான அளவில் காணப்படுகின்றது. சங்க காலச் சமூகத்தில் வாழ்ந்த விறலியர், கூத்தர், கோடியர் முதலான கலைஞர்களுள் ஒரு சாரார் பாணர்கள் எனப்படுவர். வறுமையோடு போராடிய நாடோடிகளாக வாழ்ந்த இவர்கள் அரசர்களைப் புகழ்ந்துபாடி பரிசில்பெற்றுச் செல்லும் வழக்கமுடையவர்கள். இனக்குழுச் சமூக ஆட்சியின்போது செல்வாக்குடன் இருந்த இவர்கள் பின்னாளில் பேரரசுகளின் உருவாக்கலுடன் புலவர்கள் அரசவைச் செல்வாக்குப் பெறத் தொடங்கியவேளை, படிப்படியாக செல்வாக்கிழந்து வறுமைக்குட்பட்டு மறைந்துபோயினர். கிழக்கிலங்கை வாய்மொழிப் பாடல்களின் வழியாக பாணர்கள் பற்றிய மரபினை ஆய்வுசெய்யும் வகையில் இப்பேருரை அமைந்துள்ளது. பேராசிரியர் கைலாசபதி அவர்களின் 33ஆவது நினைவுப் பேருரையாக வழங்கப்பட்டது.

ஏனைய பதிவுகள்

Norges beste online casino bibel!

Content Betalingsløsninger på norske casinoer påslåt nett – Casino maria Mobile Må individualitet betale betaling for gevinster? Uttak fra gevinster – Et brukervennlig prosess Månedens