16050 உளக் குவிப்பும் கற்றலும்.

திருநாவுக்கரசு கமலநாதன். யாழ்ப்பாணம்: நல்லூர் சைவத் தமிழ்ப் பண்பாட்டுக் கலைக்கூடல், 331, கோவில் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, மே 2021. (யாழ்ப்பாணம்: சோலோ பிரின்டர்ஸ், 12/3, முதலியார் ஒழுங்கை, நாவலர் வீதி).

xv, (4), 95 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 450., அளவு: 21.5×15.5 சமீ.

இந்நூல் உளக்குவிப்பு பற்றிய பல்வேறு விடயங்களை திரட்டித் தருகின்றது. கற்றல் செயற்பாட்டுடன் உளக்குவிப்பைத் தொடர்புறுத்தி ஆசிரியர் நூலைத் தொடங்குகிறார். பின்னர் உளக்குவிப்பை ஊக்குவிப்பதற்கான பல்வேறு வழிகளை விளக்கியிருக்கின்றார். உளக்குவிப்பும் கற்றலும், உளக்குவிப்பு என்பதால் கருதப்படுவது யாது?, உளக்குவிப்பை ஊக்குவிக்கும் வழிமுறைகள், சீரான நித்திரையும் உளக்குவிப்பும், உடற்பயிற்சியும் உளக்குவிப்பும், இயற்கையுடன் நேரத்தைச் செலவிடலும் உளக்குவிப்பும், தியானமும் உளக்குவிப்பும், சென் தியானம், யோகாசனப் பயிற்சியும் உளக்குவிப்பும், மூச்சுப் பயிற்சியும் உளக்குவிப்பும், தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளும் உளக்குவிப்பும், இடைநிறுத்திக் கருமமாற்றல், உணவில் மாற்றம், இயற்கைச் சத்துணவைத் தெரிதல், உளக்குவிப்பை ஊக்குவிப்பதற்கான மேலும் சில குறிப்புகளும் பயிற்சிகளும் ஆகிய 15 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரித் தாயின் இருபத்தோராவது அகவைச் சுவடாக 02.05.2021 அன்று வெளியிடப்பட்ட நூல்.

ஏனைய பதிவுகள்