16264 யா/மட்டுவில் தெற்கு சரஸ்வதி வித்தியாலயம் : நூற்றாண்டு நிறைவு மலர் 1908-2008.

ம.லினாஷ்குமார் (இதழாசிரியர்). சாவகச்சேரி: சரஸ்வதி வித்தியாலயம், மட்டுவில் தெற்கு, 1வது பதிப்பு, 2008. (யாழ்ப்பாணம்: கங்கை பிரின்டர்ஸ், 781, காங்கேசன்துறை வீதி, சிவலிங்கப் புளியடி).

(18), 143 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×20 சமீ.

ஆசிச் செய்திகள், பள்ளியின் பார்வை, விஷேட ஆக்கங்கள், ஆசிரியர் பக்கம், மாணவர் பக்கம் ஆகிய ஐந்து பிரிவுகளில் இம்மலர் தொகுக்கப்பட்டுள்ளது. ‘ஆசிச் செய்திகள்” பிரிவில் 19 சமூகப் பிரமுகர்களின் ஆசிச் செய்திகளும் வாழ்த்துக்களும் இடம்பெற்றுள்ளன. ‘பள்ளியின் பார்வை” என்ற பிரிவில் பாடசாலையின் வரலாறும், மறக்கமுடியாத ஆசிரியர் பெருந்தகைகள் பற்றியும், பாடசாலையின் செயற்பாடுகள் பற்றிய அறிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. ‘விசேட ஆக்கங்கள்” என்ற பிரிவில் இடைநிலை வகுப்புகளில் கணித விஞ்ஞானக் கல்வி (க.கந்தசாமி), சிறுநீரிழிவு (வசந்தி அரசரட்ணம்), பாரதியும் பாரம்பரிய தமிழ்க் கல்வியும் (எஸ்.சிவலிங்கராஜா), கிராமியப் பாடசாலை சமூகத் தொடர்பும் முன்னேற்றமும்: நுண்பாக அணுகுமுறை (மா.சின்னத்தம்பி), Teaching of English in Search of a Method (எஸ்.சுந்தரேஸ்வரன்), இந்து சமயக் கல்வியின் வாழ்வியல் விழுமியங்கள் (திருமதி ஜெ.இராஜநாயகம்), பாடசாலைகளின் பயிற்றுமொழியாக ஆங்கிலத்தின் மீள் அறிமுகம்-சில பிரச்சினைகள் (திருமதி அ.சத்தியசீலன்), பயன்தரு பள்ளிச் செயலுருவாக்கத்தில் முதல்வர்களின் செயற்பங்கு (வ.நடராசா), பற்களின் மகத்துவம் (சா.கஜேந்திரன்), சிறுவர்களும் படைப்புலகமும் (கொ.கைலாசநாதன்), வினைத்திறன் ஆசிரியர்களுக்கான கல்வித் தொழில்நுட்பம் (லலிதாமலர் முகுந்தன்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ஆசிரியர் பக்கம் என்ற பிரிவில் பாடசாலையின் ஆசிரியர்களான திருமதி ஜே.எல்.கே.கிரிஸ்ரி ரஞ்சன், திருமதி இ.நித்தியானந்தன், திருமதி பு.நகுலேஸ்வரன், செல்வி சி.தங்கராசா ஆகியோரின் கல்விசார் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. மாணவர் பக்கம் என்ற இறுதிப் பிரிவில் மேற்படி பாடசாலையின் 28 மாணவமணிகளின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Pinata Wins Belzebu Caça-Algum Dado

Content Safari heat $ 1 depósito – Opte por uma casa criancice apostas confiável Aproveite os seus ganhos Os 3 Melhores Cassinos Que alcançar bagarote