சபா ஜெயராசா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, ரு U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street)
vi, 106 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-685-043-7.
சமகால கலை இலக்கியத் துறையில் ‘இளம் வளர்ந்தோர் இலக்கியம்” அதிக முக்கியத்துவம் வாய்ந்த துறையாகும். ஆனால் இந்தத் துறை குறித்து தமிழில் அடிப்படையான நூல்கள் வெளிவரவில்லை. இந்தப் பின்புலத்தில் இந்நூலின் வருகை முக்கியமாக அமைகின்றது. இளம் வளர்ந்தோர் இலக்கியம், இளைஞர் பண்பாடு, இளைஞரும் ஆக்க மலர்ச்சியும், நாட்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்ட நாவல்கள், மாற்றங்களும் சிறுகதைக் கோலங்களும், இளம் வளர்ந்தோர் நாவல் இலக்கியம், இளம் வளர்ந்தோரும் ஹரிபொட்டரும், ஜப்பானிய மொழியில் இளம் வளர்ந்தோருக்கான இலகு நாவல்கள், மங்கல் வெளிச்சம்-நெடுந்தொடர் நாவல், இளம் வளர்ந்தோர் வாசிப்பில் பசி விளையாட்டுக்கள், இளம் வளர்ந்தோரின் கவிதையாக்கங்கள், இளைஞர் நகைச்சுவை, நாடகத் தளத்தில் இளம் வளர்ந்தோர், இளைஞர் இசையும் ஆடலும், இளைஞரும் மீஅறிகையும், இளைஞரும் உற்றிணைந்தோர் கற்றலும், இளைஞர் வேலையின்மைப் பிரச்சினை, பயங்கரத்தை முகாமை செய்தல், இளைஞர் செயற்பாட்டாளராய் மாற்றம் பெறுதல், இணைப்பியலும் இ-கற்றலும், இளம் வளர்ந்தோரும் வெகுசன ஊடகங்களும் ஆகிய 21 இயல்களில் இளம் வளர்ந்தோருக்கான இலக்கியம் பற்றி இந்நூல் விரிவாகப் பேசுகின்றது. பேராசிரியர் சபா ஜெயராசா தமிழில் கல்வியியல் துறைசார்ந்த நூல்கள் பலவற்றை எழுதி அத்துறைசார்ந்த விருத்தியில் முதன்மையான பங்கு வகித்து வருபவர். கலை, இலக்கியம், உளவியல், தத்துவம் எனப் பல்வேறு துறைசார் புலங்களுடன் ஊடாடி வருபவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70227).