16397 கனகரவியின் சிறார் பாடல்கள்.

கனகரவி (இயற்பெயர்: கனகரட்ணம் ரவீந்திரன்). சுவிட்சர்லாந்து: ரவீந்திரன் சுபத்திரை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (வவுனியா: லேற்றஸ் பிறின்டர்ஸ், வைரவபுளியங்குளம்).

16 பக்கம், வண்ணச் சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ.

ஈழத்தில் வவுனியா வடக்கில் உள்ள பூந்தோட்டம் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கனகரவி, 1993 முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். 2007 இறுதிப் பகுதியில் புலம்பெயர்ந்து, சுவிட்சர்லாந்தில் ஊரி மாநிலத்தில் வாழ்ந்து வருகின்றார். கனகரவியின் ஆறாவது படைப்பாக இந்தச் சிறுவர் பாடல் தொகுப்பு தற்போது வெளிவந்துள்ளது. இளைய தலைமுறையினரிடையே தமிழார்வத்தை வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் இப்பாடல் தொகுப்பினை தாயகத்தில் தனது ஊரான பூந்தோட்டம் கிராமத்தில் வெளியிட்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்

16990 நோபல்பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் – 04 (1936-1949).

நா.சு.சிதம்பரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).  80 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 280., அளவு: