16439 யாழ்ப்பாணப் பள்ளிக்கூடம் (இளையோர் நாவல்).

சந்தரசி சுதுசிங்ஹ (சிங்கள மூலம்), கண்ணம்மா (தமிழாக்கம்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

(8), 62 பக்கம், சித்திரங்கள்;, விலை: ரூபா 390., அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 978-624-6165-00-0.

சிறுவர்களிடையே இன வேறுபாட்டினைக் களைந்து இன ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மும்மொழிகளிலும் எழுதப்பட்ட யாழ்ப்பாணப் பள்ளிக்கூடம் சிறுவர் கதையின் தமிழ் வடிவம் இதுவாகும். மாத்தறையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு, யாழ்ப்பாணப் பாடசாலை, நல்லூர் ஐஸ்கிரீம், யாழ்ப்பாண அயலவர்கள், ஒரே பெயர், அற்புதப் பரிசு, நெடுந்தீவுப் பயணம், பண்பான ஆசிரியர், யாழ்ப்பாண நூலகம் ஆகிய அத்தியாயங்களில் இக்கதை விரிகின்றது. ஆசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், யாழ்ப்பாணக் கிராமங்களிலும் தான் தங்கியிருந்த காலத்தில் கண்டுணர்ந்த தமிழர்களின் கலாச்சாரத்தினை அவதானித்து அதனை தன் கதாபாத்திரங்களினூடாக இந்நூலில் பதிவுசெய்திருக்கிறார். யாழ்ப்பாண மக்களின் தனித்துவமான கலாச்சாரம், பண்பாடு பற்றிய புரிதலை இதன்மூலம் சிங்கள மக்களிடையே கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

online casino

Real online casino Casino online Online casino As for the gameplay, the slot is played on a grid that consists of five rows and five