16441 மேடையிலே பேசுவோம்: சிறுவர்களுக்கான மேடைப்பேச்சுகள்.

எஸ்.சிவலிங்கராஜா. யாழ்ப்பாணம் : எஸ்.சிவலிங்கராஜா, ”ஸ்ரீவித்யா”, பிள்ளையார் வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).

viii, 68 பக்கம், விலை: ரூபா 480., அளவு: 24.5×19 சமீ., ISBN: 978-955-38439-0-6.

ஆண்டு ஒன்றில் இருந்து ஆண்டு நான்கு வரையில் பயிலும் மாணவர்களின் பாடசாலை மேடைகளில் பயன்படுத்துவதற்கென எழுதப்பட்ட மேடைப் பேச்சுக்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சிறுவர்களுக்கான கட்டுரைக்கும், மேடைப் பேச்சுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளை உணர்ந்து பேசுபவர்களின் வயது, சொற்களஞ்சியம், சூழல், உளவியல் முதலானவற்றை மனங்கொண்டு இப்பேச்சுக்கள் பெரும்பாலும் 15-20 வசனங்கள் கொண்டதாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. என் அம்மா, தாய் அன்பு, என் ஆசிரியர், எனது பாடசாலை, எங்கள் வீடு, காலைக்காட்சி, மாலைக்காட்சி, கடற்கரைக்காட்சி, மழைக்காட்சி, சுப்பிரமணிய பாரதியார், ஆறுமுக நாவலர், சோமசுந்தரப் புலவர், ஒளவையார், விபுலாநந்தர், தனிநாயகம் அடிகளார், சுவாமி ஞானப்பிரகாசர், திருவள்ளுவர், தைப்பொங்கல், தீபாவளி, நவராத்திரி, ஆடிப்பிறப்பு, தேர்த்திருவிழா, நாட்டார் பாடல்கள், சுற்றாடலைப் பாதுகாப்போம், சுத்தம் சுகம் தரும், உழவுத் தொழில், கல்விச் செல்வம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 30 பேச்சுக்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.   

16441 மேடையிலே பேசுவோம்: சிறுவர்களுக்கான மேடைப்பேச்சுகள்.

எஸ்.சிவலிங்கராஜா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, திருத்திய 2வது பதிப்பு, 2024, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

ஒ, 78 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 495., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6165-01-7.

ஆண்டு ஒன்றில் இருந்து ஆண்டு நான்கு வரையில் பயிலும் மாணவர்களின் பாடசாலை மேடைகளில் பயன்படுத்துவதற்கென எழுதப்பட்ட மேடைப் பேச்சுக்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. முதற்பதிப்பில் இடம்பெறாத ஐந்து பேச்சுக்கள் இப்பதிப்பில் மேலதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியின் சிறப்பு, தீபாவளிப் பண்டிகை, நூலகப் பயன்பாடு, சாரணியத்தின் தந்தை பேடன் பவுல் பிரபு, நான் விரும்பும் பெரியார், டெங்கை ஒழிப்போம் ஆகிய 5 தலைப்புக்கள் இப்பதிப்பில் மேலதிகமாக இணைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பேச்சுகளுக்குக் கீழே இப்பேச்சுக்களுடன் தொடர்புடைய சில பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் பேசும்போது வசதிக்கேற்ப அப்பாடல்களையும் பயன்படுத்தலாம். பேராசிரியர் சிதம்பரப்பிள்ளை சிவலிங்கராஜா, யாழ்ப்பாணப் பல்கலக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தனது பாடசாலைப் பருவத்திலேயே பேச்சுப் போட்டிகளிற் பங்குபற்றி ஈழகேசரி பொன்னையா நினைவுத் தங்கப் பதக்கம் உட்படப் பல பரிசில்களைப் பெற்றவர். தனது நகைச்சுவைப் பேச்சால் எந்தச் சபையையும் ஈர்க்கும் ஒருவர் இவர்.     

ஏனைய பதிவுகள்

Free Spins Casino Online

Content Mega joker slot – Hurda Mycket List Karl Besegra Tillsamman Omsättningsfria Free Spins? Free Spins On Starburst Casinostugan Befinner sig Det Absolut Att Utpröva