கீர்த்தி. (இயற்பெயர்: குமரேஸ்வரன் கீர்த்திசிங்கம்). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2017. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆப்செட்).
x, 166 பக்கம், விலை: இந்திய ரூபா 90.00, அளவு: 18×12.5 சமீ.
இசையுடன் பாடக்கூடிய அழகான தமிழ்ப் பாடல்கள் 49உடன் ‘செம்புலக் காதலி” என்ற திரை நாடகமும், கதைச் சுருக்கத்துடன் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. இளவாலை புனித ஹென்றி அரசர் கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பெற்று சென்னைப் பல்கலைக்கழகம், வடக்கு லண்டன் பல்கலைக்கழகம், கிரினிச் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உயர்கல்வி கற்று தற்போது லண்டனில் புலம்பெயர்ந்து வாழ்பவர் கீர்த்தி.