க.ஜெயவாணி. ஏழாலை: சித்தி விநாயகர் நூல் நிலையம், 1வது பதிப்பு, கார்த்திகை 2011. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்).
(4), 58 பக்கம், விலை: ரூபா 150., அளவு: அளவு: 19×13 சமீ.
‘ஏழாலை வாணி” என்ற பெயரிலும் இலக்கிய உலகில் அறியப்பெற்றவர் க.ஜெயவாணி. வானொலியில் தவழ்ந்தவையும், சிற்றிலக்கியச் சஞ்சிகைகளில் அச்சேறியவையுமான கவிதைகளின் தேர்ந்த தொகுப்பாக இக்கவிதைகள் அமைகின்றன. இவரது பல கவிதைகள் சமகாலத்தையும் மனிதர்களையும் பச்சையாகத் தோலுரித்துக் காட்டுபவையாக அமைகின்றன. சில சமூக நடப்புகளை எள்ளிநகையாடுகின்றன. சோகம், கோபம், ஏக்கம், எதிர்பார்ப்பு எனப் பல்வேறு உணர்வுகளின் வெளிப்பாடுகளாக இவை மலர்ந்துள்ளன. உயிர்போன பிறகு, சொல்லம்மா, குடியுரிமை, மனிதநேயம், தந்தை, ஓர் ஆண்டு நினை(றை)வில், நீ நடக்கலாம், தெய்வ சபைக்கு, பயணித்த பாதையில், மழலை, கடன்காரி, உன் நினைவில், உனக்காய், அன்னையர் தினம், வரம் வேண்டும், இன்னும் எத்தனை பொழுதுகள், எழுது, விளங்கமுடியாதவள், உனக்காகவும், யுத்தம் ஏற்படுத்திய சமூகத் தாக்கம், மனசு, மனமெனும் நூலகம், கற்பனைக் காகிதம், வேறு வழியின்றி, எஞ்சி நிற்கிறது, என் சொல்ல, இதயம், கல்வெட்டு, கடவுளுக்கு ஒரு கடிதம், ஆறுதல், அள்ளிய மழையில் தெளித்தவை சாரல், உள்ளம் சொன்னது ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 32 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65039).