16669 சுபாவம் (சிறுகதைகள்).

க.சட்டநாதன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜ{ன் 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

viii, 98 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-38-2.

யாழ்ப்பாணத் தீவகத்தில் வேலணைக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரான கனகரத்தினம் சட்டநாதன், தமிழகத்தில், சென்னை விவேகாநந்தாக் கல்லூரியில் பயின்று, B.Sc. பட்டம் பெற்றவர். ஆசிரியப் பணியை மேற்கொண்டவர். நவீன கலை இலக்கியத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் மார்க்ஸிம் கோர்க்கி, அன்டன்செக்கோவ், புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் முதலியவர்களின் ஆளுமைகளால் ஈர்க்கப்பட்டவர். இவரது முதற் படைப்பான “நாணயம்” என்ற சிறுகதை 1970ஆம் ஆண்டு வீரகேசரி இதழில் வெளிவந்தது. படைப்பு முயற்சியோடு பத்திரிகைத் துறையிலும் இவர் பணியாற்றியுள்ளார். 1972-74 காலப்பகுதியில் ஈழத்தில் வெளிவந்த “பூரணி” என்ற இலக்கிய இதழின் இணையாசிரியர்களில் ஒருவராகவும் இவர் திகழ்ந்துள்ளார். மனிதநேயம், அதனை அநுபவ முழுமையுடன் வாசகனுக்குத் தொற்ற வைக்கவல்ல சொல்நயம் என்பன இவரின் படைப்பாளுமையின் சிறப்புக் கூறுகள். அகமனப்போராட்டங்களை, குறிப்பாக ஆண்-பெண் உறவுச் சிக்கல்களை சமூகப் பிரச்சினைகளை,எந்தச் சிடுக்குமில்லாமல் எளிமையாக முன்வைப்பதும் வாழ்வின் அனுபவங்கள் கதைகளில் உயிர்பெறுவதும் தனித்துவமாக இவரது கதைகளில் வந்துள்ளன. இத்தொகுதியில் அவர் எழுதிய கனவு மெய்ப்பட வேண்டும், தீர்மானமாய், தடை, சருகு, குற்றமும் தண்டனையும், செல்லும் திசை, சுபாவம், விபத்து, ஆறுதல், கனவும் பொழுதுகள், தனியன்கள் ஆகிய பதினொரு கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூல் 150ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Money

Blogs Is actually funding a tank for your fish worthwhile? The fresh eleven Better Rimless Aquariums (2024 Reviews) – Fish Staying In style! Purple Water