17226 தென்கிழக்காசிய விடுதலைப் போராட்டங்கள்.

ஐங்கரன் விக்கினேஸ்வரா. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

108 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6601-00-3.

ஐங்கரன் விக்கினேஸ்வரா தென்கிழக்காசிய நாடுகளில் பல்வேறு பிராந்தியங்களில் நிகழ்ந்த தேசிய எழுச்சிகள் பற்றியும் விடுதலைப் போராட்டங்கள் பற்றியும் அவ்வப்போது ஊடகங்களில் எழுதிய 14 அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். போகன்விலேயின் சுதந்திரப் பிரகடனம், நியு கலிடோனியா தனிநாடாக மாறுமா?, உய்குர் மக்களின் தேசிய எழுச்சி, திபெத்தின் சுதந்திர வாசல் திறக்குமா? தாய்வான் துணிந்து நிற்குமா?, ஹங்காங்கின் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம், மின்டோனா-இறையாண்மை பெற்ற தேசம், மாவோரி பழங்குடி மக்களின் உரிமைக் குரல், ரோஹிங்கியா மக்கள் மீதான வன்முறை, கரேன் இன மக்களின் சுதந்திரப் போராட்டம், கிழக்கு திமோர்-முடிவிலா துயரில், மேற்கு பப்புவாவில் சுயநிர்ணயத்திற்காக போராட்டம், ஆச்செ-தேசத்தின் சுதந்திரக் கனவு, வியட்நாம்- வீரத்தின் விளைநிலம் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. சமகால சர்வதேச அரசியல் பற்றிய விழிப்புணர்வினை ஈழத்தமிழரிடையே ஏற்படுத்துவதில் ஐங்கரனின் கட்டுரைகள் மிகுந்த தாக்கத்தினை செலுத்திவருகின்றது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 376ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

16484 உயிர் சுமந்த சுமை.

கிருஷ்ணவேணி (இயற்பெயர்: சாந்தி விக்ரர் மான்ன்). பரந்தன்: திருமதி சாந்தி விக்ரர் மான்ன், 1/4 ஏக்கர், குமரபுரம், 1வது பதிப்பு, பங்குனி 2015. (கிளிநொச்சி: வேழன் பதிப்பகம், கனகபுரம் வீதி). 96 பக்கம், விலை: