நூற்றாண்டு விழா மலர்க் குழு. கல்முனை: நூற்றாண்டு விழாக் குழு, ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1997. (மட்டக்களப்பு: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்). (6), 62 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×22.5 சமீ. இம்மலரில் ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்திகளுடன், தலைவர் என். நாகராஜாவினதும் செயலாளர் க.பீதாம்பரம் அவர்களினதும் அறிக்கைகளும், இராமகிருஷ்ண சங்கம் சுவாமி விவேகானந்தரால் உலகிற்கு வழங்கப்பட்ட கொடை (சுவாமி அஜராத்மானந்தா), சர்வ சமய சிந்தனையில் இராமகிருஷ்ண மிஷன் (அருட்திரு.எஸ்.ஏ.ஐ.மத்தியு), இராமகிருஷ்ண மிஷனின் தோற்றமும் தொண்டுகளும் (எம்.முருகேசபிள்ளை), குருநாதரைப் போற்றுவோம் (மு.சடாட்சரம்), இராமகிருஷ்ண சங்கமும் முஸ்லிம்களின் கல்வியும் (எஸ்.எச். எம்.ஜெமீல்), மானுட மேம்பாட்டிற்கு சுவாமி விவேகானந்தர் (பொன். ஏரம்பமூர்த்தி), ஆன்மீகத் துறவியின் அமெரிக்க முழக்கம் (திருமதி இ.பொன்னுத்துரை), ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் பாதையில் ஆங்கிலேயப் பெண் (எம்.கே.பேரின்பராஜா), பரமஹம்சரும் பராசக்தியும் (வி.ரி.சகாதேவராஜா), அன்னை சாரதாதேவியின் ஆன்மீக வாழ்வு (திருமதி க.லோகிதராஜா), இலங்கையில் இராமகிருஷ்ண சங்கத்தின் கல்விப் பணிகள் (பெ. விஜயரெட்ணம்), Sri Ramakrishna: an apostle of our time )இ வில்லுப்பாட்டுக் கலை (கு.குணநாயகம்), இராமகிருஷ்ண சங்கமம் (கலி விருத்தம்), ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று, கிழக்கிலங்கையில் ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கம் (சி.காசிபதி தெய்வநாயகம்), வேதாந்த கேசரி சுவாமி விவேகானந்தர் – கவிதை – (வ.ஞானமாணிக்கம்), மானுடம் தழைக்க மழையாய் நின்றார்- கவிதை- (இரா.கிருஷ்ணபிள்ளை), அன்னை ஆனாரே-கவிதை (பூவை சரவணன்), சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் (செல்வி செ.ஜெயசித்திரா), நான் கண்ட விவேகானந்தர்: அவர் எமக்களித்த சேவை முத்துக்கள் (எஸ்.மனோகரன்பிள்ளை), ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் குருகுல வாழ்க்கை, சுவாமி விவேகானந்தரும் இந்துமத மறுமலர்ச்சியும் (செல்வன்.த.பிரபாகர்), இராமகிருஷ்ண சங்கரும் சுவாமி விபுலானந்தரும் (வே.தட்சணாமூர்த்தி), தென்நாட்டில் சுவாமி விவேகானந்தர் (செல்வி.சு.கேதிகா) ஆகிய படைப்பாக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21030).
Effective No-deposit Bitcoin Casino Added bonus Codes: 2024 Upgrade
Blogs Treasure horse slot machine: No deposit Incentive Internet casino PA Totally free Spins To your Chocolate BLITZ BOMBS Through to Verification During the COSMICSLOT