7007 2010 புலமைப்பரிசில் செயல்நூல்:  தொகுதி 2 (தரம் 4 வழிகாட்டல்).

பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, ஜனவரி 2010. (உடத்தலவின்ன: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்ன மடிகே).

40 பக்கம், சித்திரங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 142.50, அளவு: 28×21 சமீ., ISBN: 978-955-1779-31-3.

சிந்தனை வட்டத்தின் 313ஆவது வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூல் 2010 ஆகஸ்ட் மாதம் புலமைப்பரிசில் (தரம் 5) பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் வழிகாட்டி நூலாக வெளிவந்துள்ளது. பரீட்சையில் பகுதி-1க்கான வினாக்களுக்கு மாணவர்களைத் தயார்செய்யத்தக்க வகையில் தமிழ், கணிதம், கணிதப் புலமை, போன்றவற்றுக்கான குறிப்புகளும், பயிற்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. 2010ஆம் ஆண்டில் அகில இலங்கைரீதியில் சிந்தனை வட்டத்தால் நடத்தப்படும் புலமைப்பரிசில் தபால் மூல பாடநெறியில் தரம் 4 பாடப்பரப்பை மையப்படுத்திய இரண்டாவது நூல் இதுவாகும்.

ஏனைய பதிவுகள்